உணர்ச்சிகரமான பிரச்சினையில் வேடிக்கைப் பேச்சு..! உதயநிதியின் காமெடியால் முகம் சுழித்த மூத்த தலைவர்கள்..!

19 September 2020, 5:26 pm
udhayanidhi - dmk - updatenews360
Quick Share

சென்னை : நீட் தேர்வு பிரச்சினை தமிழ்நாடெங்கும் கொந்தளிப்பை உருவாக்கியுள்ள சூழலில், அதை எப்படி ரத்து செய்வோம் என்று திமுக இளைஞர் அணித்தலைவர் உதயநிதி காமெடியாகப் பேசியது திமுக நிர்வாகிகள் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

சென்னையில் திமுக கிழக்கு மாவட்டம் சார்பாக நடத்தப்பட்ட முப்பெரும் விழாவில் உதயநிதி திராவிட இயக்க வரலாறு பற்றிய பயிற்சி வகுப்புகளைத் தொடங்கி வைத்தார். திராவிட இயக்க வரலாறு பற்றிய வகுப்புகளைத் தொடங்கி வைக்க திமுகவில் மூத்த முன்னோடிகள் வரலாறு தெரிந்தவர்கள் யாருமே இல்லையா..? என்று அனைவரும் நெளிந்தவாறு இருக்க, உதயநிதி பந்தாவாக நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார்.

என்ன பேசப்போகிறாரோ என்று திமுக தொண்டர்கள் அனைவரும் பதற்றமாகப் பார்த்துக்கொண்டிருக்க அவர் பேசத்தொடங்கினார். “இங்கே நிறைய மூத்த கழக முன்னோடிகள் இருக்கிறீர்கள். நான் பெரியாரை பார்த்தது கிடையாது. அண்ணாவோடு பேசியது கிடையாது. தலைவர் கலைஞரை பார்த்து வளர்ந்தவன். நீங்கள் எல்லாம் பெரியார் அண்ணாவோடு பழகியவர்கள், பேசியவர்கள். எனவே உங்களை வாழ்த்தி பேச அனுபவமோ, வயதோ இல்லை”, என்று அடக்கத்துடன் தொடங்கினார்.

ஆனால், அங்கே இருந்த மூத்த முன்னோடிகள் யாருக்கும் திராவிட இயக்க வரலாறு பற்றிய பயிற்சி வகுப்புகளைத் தொடங்கி வைக்கும் தகுதி இல்லையா..? என்ற கேள்வியும் தவிர்க்க முடியாத வகையில் எழுந்தது.

அதைத் தொடர்ந்து, கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் சேகர்பாபு, எப்படி உதயநிதி சொன்ன பணிகளை உடனுக்குடன் செய்தார் என்பதை புளகாங்கிதத்துடன் விவரித்தார். ஒரு ஆட்டோக்காரர் தனது ஆட்டோவை எரித்த வீடியோவை அண்ணன் சேகர் பாபு அவர்களுக்கு அனுப்பி ஆட்டோகாரரை சந்திக்க முடியுமா என்று கேட்டதாகவும், அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு இருந்த காலகட்டத்திலும், அடுத்த நாள் காலை சேகர்பாபு ஆட்டோக்காரரை அழைத்து உதயநிதி முன் நேரில் நிறுத்தியதாகவும் பாராட்டினார். பின் அந்த ஆட்டோக்காரருக்கு உதயநிதி சொன்னபடி, நிதி தர ஏற்பாடு செய்ததையும், புதிய ஆட்டோ வாங்கித் தந்ததையும் பாராட்டினார். சட்டமன்றத் தேர்தலில் முன்கூட்டியே சீட் வாங்கி விட்டோம் என்ற மகிழ்ச்சியில் சேகர்பாபு பூரித்துப்போனார்.

பின்னர், தற்போதைய தலைமுறையினரிடம் பெரியார், அண்ணா மற்றும் நம்முடைய கொள்கைகளை கொண்டு சேர்க்க முடியவில்லையே என்று ஆதங்கப்பட்டார். பெரியார் இருந்தபோது நாடு எப்படி அடிமைப்பட்டு கிடந்ததோ, அதை போல ஒரு நிலைமையை ஆளும் அதிமுக அரசு உருவாக்கி உள்ளது என்று பேச்சில் ஒரு பஞ்ச் வைத்தார். பெரியார் காலத்தில் எப்படி நாடு அடிமைப்பட்டுக் கிடந்தது. பெரியார் தமிழர்களை விடுதலை செய்தவர் என்று கூறுகிறார்களே என்று அனைவரும் உள்ளுக்குள் குழம்பினாலும் வெளியில் பலத்த கையொலி எழுப்பினார்கள்.

“இந்த நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று நாங்கள் கூறினால் எப்படி செய்வீர்கள் என்று எங்களிடமே ஆட்சியாளர்கள் கேட்கிறார்கள். அந்த ரகசியத்தை தற்போது சொல்கிறேன்”, என்று சொன்னவுடன், தலைவர் ஸ்டாலினாலேயே சரியாகச் சொல்ல முடியாததை உதயநிதி சொல்லப்போகிறார் என்று அனைவரும் காதுகளைத் தீட்டி கவனமாகக் கேட்க “அதற்கு ஆட்சியாளர்களுக்கு மானம், ரோஷம், மாணவர்கள் மீது அக்கறை இருக்க வேண்டும். அது எங்களுக்கு இருக்கிறது. நாங்கள் அதனை கண்டிப்பாக செய்வோம்” என்று முடித்தார்.

அவர் ஜோக் சொன்னாரா, சீரியஸாகப் பேசினாரா என்பதே பிடிபடாத சூழலில், பாதிபேர் கைதட்ட பாதிபேர் சிரித்தனர். உணர்ச்சிகரமான பிரச்சினையில் இப்படி பொறுப்பில்லாமல் வேடிக்கையாகப் பேசுகிறாரே என்று மூத்த நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

போதாக்குறைக்கு பயிற்சி வகுப்பை நடத்த வந்த சுப. வீரபாண்டியன் “உதயநிதி இந்த நிகழ்ச்சியை தொடங்கி வைத்துள்ளார். உதயசூரியன் இங்கிருந்து தொடங்கும் என்பது என்னுடைய ஆழமான நம்பிக்கையாக இருக்கிறது”, என்று அவர் பங்குக்கு திமுகவின் உதயசூரியன் என்று உதயநிதியைப் பாராட்டினார். ‘ஓடிவருகிறான் உதயசூரியன்’ என்ற பாடலை கருணாநிதிக்காக நாகூர் அனிபா பாடிவந்தார், கருணாநிதி இடத்தில் இனி உதயநிதிதான் என்பதை சுப-வீரபாண்டியனும் உடன்பிறப்புகளுக்குப் புரியவைத்தார்.

Views: - 19

0

0