திமுக இலக்கு-200 ‘புஸ்’.. 160 ஆக திடீர் குறைப்பு! அதிமுக கூட்டணியால் வந்த கலக்கம்!!

28 February 2021, 8:31 pm
DMK admk - Updatenews360
Quick Share

2019 நாடாளுமன்ற தேர்தலில் திமுக, காங்கிரஸ் கூட்டணி தமிழ்நாட்டில் 38 இடங்களை வென்றபோது அந்த கூட்டணி பெரும் மகிழ்ச்சியில் திளைத்தது.

No difference of opinion between DMK, Congress: KS Alagiri- The New Indian  Express

ஏனென்றால் இதை சட்டப்பேரவை தேர்தலுடன் அப்படியே பொருத்திப் பார்த்தால் 220 தொகுதிகளுக்கு குறையாமல் திமுக கூட்டணி வெற்றி பெற்றதற்கு சமம் என்று கருதியதுதான்.

இதே அணி 2021 தேர்தலிலும் நீடித்தால் 200 தொகுதிகளில் நிச்சய வெற்றி பெற முடியும் என்று திமுக நம்பியது.

Hold onto my last tweet': Prashant Kishor reiterates prediction on BJP's  seats in Bengal | India News - Times of India

என்றபோதிலும் பிரபல அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோரின் ஐபேக் குழுவுடன் 2021 தேர்தலுக்கு பணியாற்ற திமுக ஒப்பந்தம் செய்துகொண்டது. ஐபேக்கும் தேர்தல் வியூகங்களை வகுத்து தரும் பணிகளில் முழு வீச்சில் களம் இறங்கியது.

இதிலேயும் கூட ஒரு விவாதம் எழுந்தது. திமுக மட்டும் 200 இடங்களில் வெற்றி பெறும் என்பதை குறிக்க இலக்கு-200 என நிர்ணயிக்கப்பட்டு இருப்பதாக திமுக தரப்பும், கூட்டணியின் வெற்றி 200 தொகுதிகளில் என்று கூட்டணி கட்சிகள் தரப்பிலும் விளக்கம் தரப்பட்டது.

DMK elects senior party leaders to key positions | Deccan Herald

எது எப்படியோ நிர்ணயித்த இலக்கு 200 என்பதால் 6 மாதங்களுக்கு முன்பே திமுக கூட்டணி 34 இடங்களில் தோல்வி அடையும் என்பதை மறைமுகமாக பிரசாந்த் கிஷோர் ஒப்புக்கொண்டு இருக்கிறார் என்ற பேச்சும் அடிபட்டது.

அதேநேரம் ஐபேக் குழு திமுக நிச்சய வெற்றி பெறும் என்று எதிர்பார்க்க்கும் தொகுதிகள் 100, அதிமுக கூட்டணிக்கு கடும் மல்லுக்கு நிற்கும் தொகுதிகள் 100 என பிரித்துக் கொண்டு அதற்கேற்ப தேர்தல் வியூங்களை வகுக்க பிரசாந்த் கிஷோர் ஆரம்பித்தார்.

இதன் பிறகு வெற்றி கணிப்பு பற்றி பேச ஆரம்பித்த திமுக முன்னணி தலைவர்களின் சுதி கொஞ்சம் இறங்கியது. அவர்கள் 180 என்பது இடங்களில் திமுக கூட்டணி நிச்சய வெற்றி பெறும் என்று மேடைகளில் கூறத் தொடங்கினர். தீவிரமாக உழைத்தால் இன்னும் 20 தொகுதிகளில் கூடுதலாக வெற்றி காண இயலும் என்று தங்களைத் தாங்களே சமாதானப்படுத்தியும் கொண்டனர்.

DMK to organise meetings in 12,617 villages- The New Indian Express

தற்போது திமுகவுக்கு தங்கள் கூட்டணியின் வெற்றி வாய்ப்பு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருவது கண்கூடாக தெரியத் தொடங்கியுள்ளது.

அண்மையில் திருச்சியில், திமுக முதன்மைச் செயலாளர் K.N.நேரு செய்தியாளர்களிடம் பேசும்போது தங்கள் கூட்டணியின் வெற்றி வாய்ப்பு குறித்த தனது மதிப்பீட்டை வெளிப்படையாகவே சொன்னார்.

“இந்த தேர்தலில் திமுக கூட்டணி 160 இடங்களில் வெற்றி பெறும். மத்திய மண்டலத்தில் 48 தொகுதிகள் உள்ளன. அதில் 40 இடங்களில் ஜெயிக்கும். திமுக கூட்டணியிலிருந்து சிறு சிறு கட்சிகள் வெளியேறுவது அவர்களுக்குத்தான் பாதிப்பைத் தரும்” என்று அவர் குறிப்பிட்டார்.

K.N.NEHRU on Twitter: "… "

திமுகவின் வெற்றி வாய்ப்பு சற்று குறைவாக இருக்கிறது என்பதை
K.N.நேரு ஒப்புக் கொண்டாலும், அவர் இப்படி சொன்னதற்கு வேறு ஒரு பின்னணியும் உள்ளது.

மிகவும் பிற்பட்டோர் பட்டியலில் உள்ள வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்ததுடன் அதுதொடர்பான தீர்மானத்தையும் சட்டப் பேரவையில் உடனடியாக நிறைவேற்றினார்.

With TN polls a year away, Palaniswami resets image as a son of the soil-  The New Indian Express

இது, அதிமுக கூட்டணியில் நீடிக்க பாட்டாளி மக்கள் கட்சி வைத்த கோரிக்கையின் மீது மனநிறைவைத் தருவதாக அமைந்தது.
இதைத்தொடர்ந்து மறுநாளே அதிமுகவுடன் தொகுதி பங்கீடு பேச்சை முடித்து 23 தொகுதிகளில் பாமக போட்டியிடுவதற்கான உடன்பாடும் கையெழுத்தானது.

Alliance: PMK founder Ramadoss to meet EPS - Edappadi Palanisamy- PMK-  Ramadoss- Election Alliance- TN Elections | Thandoratimes.com |

சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியது, தொகுதி உடன்பாட்டில் பாமக கையெழுத்திட்டது, இதற்கிடையே தமிழக பாஜக மேலிட தலைவர்கள் முதல்வர், துணை முதல்வரை சந்தித்தது என்று அடுக்கடுக்கான பல்வேறு அரசியல் நிகழ்வுகள் ஒரே நாளில் நடந்து முடிந்து விட்டது.

AIADMK finalises deal with DMDK, allots 4 Lok Sabha seats

இதையடுத்து அதிமுக அமைச்சர்கள் தேமுதிக தலைவர் விஜயகாந்த் வீட்டுக்கும் சென்று அவரை சந்தித்தும் பேசினர்.

இந்த அரசியல் நகர்வுகள்தான் தற்போது திமுகவிற்கு பெரும் கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு விஷயத்தில் அதிமுக இப்படி ஜெட் வேகம் காட்டும் என்பதை திமுக கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.

PMK-AIADMK a winnable alliance in northern, western belts - The Hindu

பாமக 35 தொகுதிகளுக்கு குறையாமல் கேட்கும், இதனால் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிக்கும், இரு கட்சிகளிடமும் மனக்கசப்பு உருவாகும். இதேபோல் பாஜகவும் முரண்டு பிடிக்கும் என்று திமுக மனக்கோட்டை கட்டி இருந்தது. அவை எல்லாமே தற்போது தவிடுபொடி ஆகி விட்டது.

மேலும் அதிமுக தனது கூட்டணியில் உள்ள கட்சிகளை வரிசைப்படுத்தி அதற்கேற்ப அவர்களுடன்தொகுதி பங்கீடு பேச்சை முறைப்படி நடத்துகிறது.

அதேநேரம் திமுக கூட்டணியில் உள்ள முக்கிய கட்சியான காங்கிரசுடன், இன்னும் தொகுதி பங்கீடு பேச்சு முழுமை அடையவில்லை. காங்கிரஸ் 60 இடங்களை கேட்க உங்களுக்கு 16 தான் என்று திமுக தலைமை சொன்னதால் பேச்சுவார்த்தையில் இன்னும் முட்டுக்கட்டை நீடிக்கிறது.

அதனால் திமுக கூட்டணியில், காங்கிரஸுடன் தொகுதி பங்கீடு முடியாத நிலையிலேயே சிறு சிறு கட்சிகளுடன் இப்போது திமுக பேச்சை முன்னெடுத்து இருக்கிறது.

DMK-Congress make it official: Seal alliance in TN for 2019 Lok Sabha polls  | The News Minute

இதில் ஒரு ஆச்சர்யம் என்னவென்றால் திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு அடுத்து பெரிய கட்சிகள் என்றால் மதிமுக, விசிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகியவைதான்.

இந்த 4 கட்சிகளுமே தலா 12 தொகுதிகள் கேட்பதால் குறைவான தொகுதிகளை கொடுத்தால் திருப்தியுடன் ஏற்றுக் கொள்ளும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளித்து தொகுதி பங்கீடு பேச்சுக்கு திமுக அழைத்திருக்கிறது.

இதனால் கடந்த சட்டப் பேரவை தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியில் இருந்து திமுக அணிக்கு இடம்பெயர்ந்த 4 கட்சிகளும் கடும் அதிருப்தியில் உள்ளன.

தற்போது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தென்மாவட்டங்களில் 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு சாலையோர பிரச்சாரங்களில் தீவிரம் காட்டி வருகிறார். இனி அவர் பிரச்சாரத்தை முடித்த பின்புதான் அடுத்த கட்ட பேச்சுவார்த்தைக்கு காங்கிரஸ் வரும்.

BJP buys out if there are 10-15 MLAs… only way is 2/3rd majority: Rahul  Gandhi in Tamil Nadu | Cities News,The Indian Express

தாங்கள் கேட்ட தொகுதிகளின் எண்ணிக்கைக்கு அருகில்கூட திமுக வராததால் ராகுல்காந்தி தனது தென்மாவட்ட தேர்தல் பிரச்சாரத்தில் மத்திய பாஜக அரசையும், மோடியையும் மட்டுமே தாக்கிப் பேசினார்.

தமிழகத்தில் உள்ள திமுக கூட்டணி பற்றி அவர் எதுவும் பேசவில்லை. காங்கிரசுக்கும் திமுகவுக்கும் தொகுதி பங்கீடு முடியாததால் ராகுல் காந்தி பங்கேற்ற பொதுக் கூட்டங்களில்
திமுக நிர்வாகிகளை காண்பதும் அரிதாக இருந்தது.

திமுக கூட்டணியிலிருந்து ஏற்கனவே SDPI கட்சி வெளியேற்றப்பட்டு விட்டது. பாரிவேந்தரின் இந்திய ஜனநாயக கட்சி தானாகவே விலகிக் கொண்டு விட்டது. இன்னும் ஒருசில கட்சிகள் வெளியேறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Cast away caste, vote for welfare: IJK prez - DTNext.in

இப்படி வெளியேறும் கட்சிகளால் திமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு குறையும் என்பதை திமுகவும் உணர்ந்துள்ளது. மேலும் வடமாவட்டங்களில் உள்ள 60க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பாமகவுக்கு கணிசமான செல்வாக்கு உள்ளது.
இது அதிமுக கூட்டணிக்கு சாதகமான அம்சம்.

அதிமுக கூட்டணி வலுவாக இருப்பதால் திமுக போடும் கணக்கில் அதன் வெற்றி வாய்ப்பு இன்னும் சரி பாதியாக சரிந்து யாருக்கு இறுதி வெற்றி என்பது கேள்விக்குறியாக வந்து நிற்கும்.

இப்போதைய நிலையில் அதிமுகவின் கையே பலமாக ஓங்கி இருக்கிறது என்று அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர். இதனால் ஐபேக்கின் இலக்கு -200 என்கிற கணக்கும் ‘புஸ்’ ஆகிப் போகவே வாய்ப்புகள் அதிகம்.

இதுபற்றி அரசியல் விமர்சகர்கள் கூறும்போது, “தேர்தல் அறிக்கையில் கூற வேண்டியதையெல்லாம் தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பே திமுக தலைவர் ஸ்டாலின் கூறிவிட்டதால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சாதுர்யமாக காய்களை நகர்த்தி அவற்றை எல்லாம் தனக்கு சாதகமாக்கிக் கொண்டார்.

குறிப்பாக விவசாயிகளின் பயிர் கடன் தள்ளுபடி, மாணவர்களின் கல்விக் கடன் தள்ளுபடி, மகளிர் சுய உதவிக் குழுக்கள் வாங்கிய கடன் தள்ளுபடி என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிரடி காட்டிவிட்டார். அதுமட்டுமன்றி தூத்துக்குடி கலவரம், கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்புப் போராட்டம், ஜல்லிக்கட்டு கிளர்ச்சி, குடியுரிமை சட்டத்துக்கு எதிரான போராட்டம் தொடர்பான ஒரு சில தவிர்க்க முடியாத வழக்குகள் தவிர சுமார் 12 லட்சம் வழக்குகளை
வாபஸ் பெறுவதாக முதல்வர் அறிவித்தும் விட்டார். இதனால் இனி தேர்தல்களத்தில் திமுக பேசுவதற்கு எதுவும் இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது. இதுவும் அக்கட்சியின் வெற்றிவாய்ப்பை பாதிக்கும் விஷயங்கள்” என்று குறிப்பிட்டனர்.

TN CM Edappadi Palaniswami Kicks off AIADMK's Election Campaign for 2021  'Amma' Style

அடுத்து அதிமுகவும், திமுகவும் தங்களின் தேர்தல் அறிக்கைகளில் கவர்ச்சிகர அறிவிப்புகளை வெளியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் தாக்கம் தேர்தல் முடிவுகளிலும் எதிரொலிக்கும் என்பது நிஜம்!

Views: - 1

7

1