உதயநிதி தொகுதியில் நடிகை குஷ்பு :ஸ்டாலின் Vs அண்ணாமலை IPS!பாஜகவின் அதிரடி தேர்தல் வியூகம்

24 February 2021, 5:04 pm
DMK Vs BJP - Updatenews360
Quick Share

தொகுதி பங்கீடு பேச்சு தொடங்குவதற்கு முன்பாகவே தமிழக தேர்தல் களம் அனல் பறக்க தொடங்கிவிட்டது.
இதில் முதன் முதலில் புலிப் பாய்ச்சல் காட்டியது பாஜகதான்.

கூட்டணிக்கு தலைமை வகிக்கும் அதிமுகவிடம் போட்டியிட விரும்பும் 38 தொகுதிகளின் பெயர்களையும், அவற்றில் போட்டியிட இருக்கும் வேட்பாளர்களின் பெயர்களையும் குறிப்பிட்டு தமிழக பாஜக கடந்த ஜனவரி மாதம் முதல் வாரமே அதிரடி காட்டியது.

AJP has lost its regional character: State BJP (Bharatiya Janata Party) - Sentinelassam

இது, அக்கட்சியின் உத்தேச பட்டியல்தான் என்று கூறப்பட்டாலும் கூட அதை இன்று வரை பாஜக மறுக்கவில்லை. தற்போது இதில் இன்னும் படு ஸ்பீடாக, அரசியல் ஆட்டத்தை பாஜக ஆரம்பித்துவிட்டது.

How the AIADMK & BJP IT wings are working overtime to portray DMK chief Stalin as a dunce- The New Indian Express

குறிப்பாக திமுக தலைவர் ஸ்டாலின், அவருடைய மகனும் திமுக இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி இருவருக்கும் எதிராக நட்சத்திர வேட்பாளர்களை களமிறக்க பாஜக முடிவு செய்துள்ளது.

Will Udhayanidhi's 'Son Rise' in 2021 Tamil Nadu Polls Eclipse Stalin's CM Dream?

அந்த முக்கிய இரண்டு பிரபலங்களில் ஒருவர் தமிழக பாஜகவின் துணைத் தலைவரும், கர்நாடகாவின் சிங்கம் என்று வர்ணிக்கப்பட்டவருமான முன்னாள் போலீஸ் அதிகாரி அண்ணாமலை ஐபிஎஸ் ஆவார். இன்னொருவர் 200 படங்களுக்கு மேல் நடித்து விட்ட பிரபல நடிகை குஷ்பு.

Best thing about BJP is no scams, I criticised Modi because that was my job, Khushbu says

37 வயது அண்ணாமலை கர்நாடக மாநிலம் உடுப்பி, சிக்மகளூரு மாவட்டங்களில் 2014, 2015-ம் ஆண்டுகளில் போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றியபோது போதைப்பொருள் விற்பனை கும்பலுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுத்து ரவுடிகளை துவம்சம் செய்தவர். அவர்களுக்கு சிம்ம சொப்பனமாகவும் திகழ்ந்தவர்.

Former IPS Officer K Annamalai Joins BJP, In New Delhi Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos

பின்னர் 2018-ல் பெங்களூரு துணை போலீஸ் கமிஷனராக பதவி உயர்வு பெற்று அங்கும் அதிரடி காட்டினார். நேர்மையான, நாணயம் மிக்க அதிகாரி என்று பெயரெடுத்த அவர் பேச்சாற்றலிலும் வல்லமை மிக்கவர்.

சொந்த ஊரான கரூர் மாவட்டம் சின்னதாராபுரம் அருகில் உள்ள சொக்கம்பட்டி கிராமத்தில் விவசாயம் பார்ப்பதற்காக 2019-ல் தனது போலீஸ் அதிகாரி பதவியை ராஜினாமா செய்து பரபரப்பையும் ஏற்படுத்தியவர்.

Former Karnataka IPS officer 'Singham Annamalai' joins BJP | India News,The Indian Express

நடிகர் ரஜினி அரசியல் கட்சி தொடங்கப் போவதாக அறிவித்த போது அவருடைய கட்சியின் சார்பில் முதல்வர் வேட்பாளராக நிறுத்தப்படுவார் என்றும் எதிர்பார்க்கப்பட்டவர்தான் இந்த அண்ணாமலை என்பதும் குறிப்பிட்டத்தக்கது.

ஆனால் ரஜினி கட்சி தொடங்க மாட்டார் என்பதை முன்பே யூகித்து விட்டாரோ என்னவோ, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பாஜகவில் இணைந்து விட்டார்.

Will it be Rajinikanth vs DMK Stalin in 2021? - Quora

50 வயதாகும் நடிகை குஷ்புவுக்கு அதிக அறிமுகம் தேவையில்லை.
கருணாநிதி மீது கொண்டிருந்த பற்று, பாசம் காரணமாக 2010-ல் திமுகவில் சேர்ந்தார்.

Outlook India Photo Gallery - Khushboo

அக்கட்சியில் சேர்ந்த பிறகு குஷ்புவுக்கு தனி மரியாதையும் கிடைத்தது. இதனால் அவருக்கும், ஸ்டாலினுக்கும் மனக்கசப்பும் ஏற்பட்டது.

2013 பிப்ரவரியில் குஷ்பு பகிரங்கமாகவே ஸ்டாலின் மீது ஒரு குற்றச்சாட்டை முன்வைத்தார். “திமுகவின் அடுத்த தலைவர் ஸ்டாலின்தான் என்று ஒரு முடிவுக்கு வந்து விடக்கூடாது” என அவர் வெளிப்படையாக பேசப் போக அது திமுகவில் பெரும் சூறாவளியை உருவாக்கியது.

ఖుష్బూ గుడ్‌బై, బిజెపిలో చేరుతారనే ప్రచారం వెనుక..! | poor rapport with stalin behind khushbus resignation from dmk - Telugu Oneindia

இதனால் கொந்தளித்துப்போன சிலர் குஷ்புவின் வீட்டை சரமாரியாக கல்வீசி தாக்குதல் நடத்தினர். மோதல் முற்றியதை தொடர்ந்து அவர் திமுகவில் இருந்து விலகி 2014-ம் ஆண்டு காங்கிரஸில் சேர்ந்தார்.

அக்கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளராகவும் குஷ்பு நியமிக்கப்பட்டார். ஆனால் அங்கும் அவரால் நீண்ட காலம் நிலைத்து நிற்க முடியவில்லை. 2020 அக்டோபரில் யாரும் எதிர்பாராத வகையில் பாஜகவில் இணைந்தார். சரி, இனி தேர்தல் கள நிலவரத்துக்கு வருவோம்.

MK Stalin for talks to resolve Palar issue

சட்டப்பேரவை தேர்தலில் திமுக தலைவர் ஸ்டாலின் சென்னை கொளத்தூர் தொகுதியில் போட்டியிடுவது உறுதியாகி விட்டது. ஏற்கனவே கடந்த இரண்டு தேர்தல்களிலும் அவர் இதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறார்.

மேலும் நலத்திட்ட உதவிகள் வழங்குவதில் சென்னையில் ஸ்டாலின் அதிக முக்கியத்துவம் கொடுக்கும் தொகுதி கொளத்தூர்தான்.
சொந்த தொகுதி என்பதால் கூடுதலாகவும் அங்கு அக்கறை காட்டுவதை அவர் வழக்கமாகக் கொண்டுள்ளார்.
அவர் மீண்டும் இதே தொகுதியில் போட்டியிடுவார் என்பதால் அவருக்கு எதிராக அண்ணாமலையை பாஜக களமிறக்க முடிவு செய்துள்ளது.

பேச்சாற்றல் திறன் மிக்க அண்ணாமலை எதையும் புள்ளிவிவரங்கள், தகுந்த ஆதாரங்களுடன் பேசக்கூடியவர்.
திமுகவில் யாரையாவது நேருக்கு நேர் விவாதிக்க தயாரா? என்று அவர் சவால் விடுத்து பேசினால் அதற்கு யாரும் பதில் சொல்ல கூடாது என்ற உத்தரவே பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறுவார்கள். அந்த அளவிற்கு திமுகவுக்கு அவருடைய பேச்சாற்றல் மீது பயம் உண்டு.

மு.க. ஸ்டாலின் சொன்னது நீதிமன்ற அவமதிப்பு... அண்ணாமலை பரபரப்பு பேட்டி..! | Bjp vice president Annamalai on M.K.Stalin

அண்ணாமலை, கொளத்தூருக்குள் இறங்கினால் நிச்சயம் குட்டையை ஒரு கலக்குக் கலக்கி விடுவார் என்று சொல்லலாம்.
அவருக்கு பதில் கூற முடியாத நிலை கூட ஸ்டாலினுக்கு ஏற்படலாம். தவிர ஸ்டாலின் மாநிலம் முழுவதும் சென்று பிரச்சாரம் செய்ய முடியாத வகையில் கொளத்தூர் தொகுதிக்கு உள்ளேயே அவரை முடக்கிப் போடவும் வாய்ப்பு உள்ளது. அல்லது அண்ணாமலைக்கு எதிராக ஒரு பெரும்பிரச்சாரப் படையையே கொளத்தூரில் திமுக களமிறக்கும் சூழலும் உருவாகும்.

இதனால்தான் அரவாக்குறிச்சியில் போட்டியிட விரும்பிய முன்னாள் போலீஸ் அதிகாரி அண்ணாமலையை ஸ்டாலினுக்கு எதிராக பாஜக களம் இறக்குகிறது என்ற பேச்சும் அரசியல் வட்டாரத்தில் உள்ளது.

அரசியலில் உதயநிதிக்கு என்ன அனுபவம் இருக்கிறது - Kushboo- Udhayanidhi- Tnelection- MKStalin- Tamilnadu | Thandoratimes.com |

இதனால் கொளத்தூரில் கடுமையான போட்டி நிலவும் என்பதை உறுதியாக கூற முடியும். இன்னொரு பக்கம் ஸ்டாலினின் மகன் உதயநிதிக்கு எதிராக நடிகை குஷ்புவை பாஜக களம் இறக்குகிறது. 44 வயதாகும் உதயநிதி முதலில் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில்தான் நிறுத்தப்படுவார் என்று கூறப்பட்டது.

எனினும் அது அவ்வளவு பாதுகாப்பான தொகுதி இல்லை என்பதால் உதயநிதி முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிடுவார் என்று தெரிகிறது.

உதயநிதி திருச்சி கிழக்கு தொகுதியிலும் போட்டியிட வாய்ப்பு உள்ளது என்றும் கூறப்படுகிறது. அதற்காக அவருடைய நெருங்கிய நண்பர் அன்பில் மகேஷ் இந்த தொகுதியில் தீவிரமாக பணியாற்றி வருவதாகவும் திமுக உடன் பிறப்புகள் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

Anbil Mahesh on Twitter: "பிறந்த தினத்தில் ஆருயிர்த் தலைவரின் வாழ்த்துகளைப் பெற்றேன்! 🙏🖤❤️ @Udhaystalin… "

அதேநேரம் உதயநிதி எந்தத் தொகுதியில் நின்றாலும் அவரை எதிர்த்து போட்டியிட நடிகை குஷ்புவை பாஜக களமிறக்கும் என்று உறுதியாகத் தெரிகிறது.

ஒரு நடிகரை அவரைவிட வலிமை வாய்ந்த இன்னொரு சினிமா பிரபலம் மூலமே வீழ்த்த முடியும் என்று பாஜக நம்புகிறது.

அதனால்தான் உதயநிதிக்கு எதிராக குஷ்புவை நிறுத்த தமிழக பாஜக முடிவு செய்து இருக்கிறது. இதன் மூலம் ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை அடிக்க பாஜக விரும்புகிறது. தற்போது திமுகவிற்காக உதயநிதி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

அவருக்கு எதிராக குஷ்பு போட்டியிட்டால் உதயநிதியால் தனது தொகுதியை விட்டு வெளியே அதிகம் செல்ல முடியாது என்பது பாஜகவின் கணக்கு.

பாஜக கேட்கும் இந்த இரு தொகுதிகளையும் விட்டுக் கொடுக்க அதிமுக சம்மதம் தெரிவித்துவிட்டது என்ற தகவலும் தற்போது வெளியாகி இருக்கிறது.

From AIADMK to SAD, BJP allies who could not ride the Modi wave - Elections News

இந்த இரண்டு செய்திகளையும் கேட்டு அண்ணா அறிவாலயம் அரண்டு போய் இருப்பதாக சொல்கிறார்கள். அதிலும் உண்மை இருக்கவே செய்கிறது.

இதுதொடர்பாக தமிழக பாஜக மூத்த நிர்வாகி ஒருவர் கூறுகையில், “அண்ணாமலையை திமுக தலைவருக்கு எதிராக நிறுத்தினால் ஸ்டாலின் வெற்றி வாய்ப்பு நிச்சயம் கேள்விக்குறியாகி விடும். அவர் எழுப்பும் ஒரு கேள்விக்கு கூட ஸ்டாலினால் பதில் சொல்ல முடியாது. இப்போது வேண்டுமானால் அண்ணாமலை கேட்கும் கேள்விகளுக்கு பதில் கூறாமல் ஸ்டாலின் நழுவலாம். ஆனால் தொகுதியில் போட்டியிடும்போது வேட்பாளர் என்கிற முறையில் அவருக்கு கட்டாயம் பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு ஸ்டாலினுக்கு உண்டு. உதயநிதியை பொறுத்தவரை, தன்னை ஒரு பட்டத்து இளவரசர் போலவே அவர் நினைத்துக் கொள்கிறார்.

Psycho' star Udhayanidhi Stalin pledges not to do politics in cinema | Tamil Movie News - Times of India

பெண்களைப் பற்றிய ஒரு தவறான கண்ணோட்டமும் அவரிடம் இருக்கிறது. கடந்த நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தின்போது தமிழச்சி தங்கபாண்டியனை அழகான வேட்பாளர் என்று கூறி அவரை கூனிக் குறுக வைத்தார்.

Prepared to contest against Stalin, says Kushboo- The New Indian Express

அண்மையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமியை கேலி செய்வதாக நினைத்து சசிகலாவை அவமானப்படுத்தி மகளிர் அமைப்புகளின் கடும் கண்டனத்துக்கும் உள்ளானார். பெண்களை கேலி பேசும் அவருக்கு சரியான பதிலடி கொடுக்கவே உதயநிதி தமிழ்நாட்டில் எந்த தொகுதியில் போட்டியிட்டாலும் அவரை எதிர்த்து குஷ்பு நிறுத்தப்படுகிறார். குஷ்பு கேட்கும் கேள்விகளுக்கு பதில் கூற முடியாமல் உதயநிதி திணறி தோற்கப் போவதும் உறுதி” என்று அந்த நிர்வாகி ஆவேசமாக கூறினார்.

ஸ்டாலினுக்கு எதிராக முன்னாள் போலீஸ் அதிகாரி அண்ணாமலை, உதயநிதிக்கு எதிராக குஷ்பு. சபாஷ்! சரியான போட்டிதான்!!

Views: - 7

0

0