சென்னையில் ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி செல்ல முயற்சி : தி.மு.க. எம்.பி. கனிமொழி உள்பட பலர் கைது!!

Author: Babu
5 October 2020, 8:13 pm
dmk protest1 - updatenews360
Quick Share

ஹத்ராஸ் சம்பவத்திற்கு நீதி கேட்டு ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி செல்ல முயன்ற திமுக எம்.பி. கனிமொழி உள்ளிட்ட மளிரணியைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

உத்தரபிரதேசம் மாநிலம் ஹத்ராஸ் பகுதியில் பட்டியலினத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண்ணை, 4 பேர் கொண்ட கும்பல் பலாத்காரம் செய்து கொலை செய்தது. நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்தை கண்டித்து பல்வேறு மாநிலங்களில் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தியும், கொலை செய்யப்பட்ட பெண்ணின் குடும்பத்துக்கு நீதி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தும், சென்னை சின்னமலையில் இருந்து திமுக மகளிரணி சார்பில் ஆளுநர் மாளிகையை நோக்கி பேரணி நடத்தப்பட்டது. மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்த இந்தப் பேரணியானது, எம்.பி. கனிமொழி தலைமையிலான மகளிர் அணி நிர்வாகிகள் கையில் மெழுவர்த்தியை ஏந்திக் கொண்டு ஆளுநர் மாளிகையை நோக்கி புறப்பட்டனர்.

கொரோனா சமயத்தில் தடையை மீறி பேரணி நடத்தியதாக திமுக எம்.பி. கனிமொழி உள்பட மகளிரணி நிர்வாகிகளை போலீசார் கைது செய்து வாகனத்தில் ஏற்றிச் சென்றனர். அப்போது, போலீசாரின் வாகனத்தை மறித்து திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பிறகு, சிறிது நேரம் கழித்து கைது செய்யப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

Views: - 42

0

0