காங்கிரஸ் ஆட்சியில் ஆளுநருக்கு என்ன ரோல் தெரியுமா? CM ஸ்டாலினுக்கு நியாபகப்படுத்திய அண்ணாமலை..ஒரே கல்ல ரெண்டு மாங்கா!!

Author: Udayachandran RadhaKrishnan
15 April 2022, 6:03 pm
annamalai Vs Stalin -Updatenews360
Quick Share

கண்ணூர் மாநாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசிய கருத்து குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்த காணொளி இணையத்தை ஆக்கிரமித்து வருகிறது.

சமீபத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23-வது மாநில மாநாடு கேரள மாநிலம் கண்ணூரில், நடைபெற்றது. இந்த மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார்.

அந்த மாநாட்டில் அவர் பங்கேற்று பேசிய போது, மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் ஒரு அரசாங்கம், 356ஆவது பிரிவைப் பயன்படுத்தி முதன் முதலில் கலைக்கப்பட்டது கேரளத்தில்தான். மார்க்சிஸ்ட் கம்யூனஸ்ட் கட்சி அரசாங்கத்துக்கு 1959ஆம் ஆண்டு இது நடந்தது. தமிழ்நாட்டிலும் மக்களின் ஆதரவுடன் அமைந்த மக்களாக் தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக அரசு 1976 மற்றும் 1991ஆம் ஆண்டு இரண்டாவது முறையும் 356ஆவது பிரிவைப் பயன்படுத்தி கலைக்கப்பட்டது. எனவே, ஒன்றிய, மாநில உறவைப் பற்றிப் பேசும் உரிமை எனக்கும் சரி, கேரளா, தமிழ்நாட்டுக்கு உண்டு. இந்தியாவை காப்பாற்ற வேண்டுமானால் முதலில் மாநிலங்கள் காப்பற்றப்பட வேண்டும். மாநிலங்கள் காப்பாற்றப்பட்டால்தான் இந்திய நாடு காப்பாற்றப்படும். வீடுகள் இருந்தால்தான் அது தெரு. தெருக்கள் இருந்தால்தான் அது ஊர். ஊர்கள் சேர்ந்தால்தான் அது மாநிலம். மாநிலங்கள் இணைந்தால்தான் அது நாடு. ஆனால் சிலர், அரசியல் அரிச்சுவடியை மாற்றுகிறார்கள் என தற்போதைய மத்திய அரசை குற்றம்சாட்டினார்.

தற்போது முதலமைச்சர் ஸ்டாலினின் கருத்த பதிலளித்துள்ள அண்ணாமலை, 1959ல் கேரள முதலமைச்சரான நம்பூதிரிபாட் ஆட்சி காங்கிரஸ் கட்சியால்தான் கலைக்கப்பட்டது என விளக்கமளித்துள்ளார்.

அப்போது ஆட்சியை கலைத்தது மத்திய அரசு கிடையாது, அச்சமயத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவி இந்திரா காந்தி கலைத்தார். நம்பூதரியை பார்க்க இந்திராவுக்கு பிடிக்காததால் அந்த ஆட்சி கலைக்கப்பட்டது. 356ஐ பயன்படுத்த ஆட்சியை கலைக்க மட்டுமே ஆளுநரை காங்கிரஸ் பயன்படுத்தியது. அவர்கள்தான் கேரள மற்றும் தமிழக ஆட்சியை கலைத்தனர் என கூறியுள்ளார்.

இதை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், மார்க்சிஸ்ட் மாநாட்டின் மேடையில் கூறினார். அவர் மேடையில் பேசும் போது காங்கிரஸ் கட்சிக்காரர்கள் யாரும் மேடையில் இல்லை,. அதே போல அந்த மாநாட்டில் காங்கிரஸ் பிரமுகர்கள் 2 பேருக்கும் மட்டும்தான் அழைப்பு விடுத்திருந்தனர்.

ஆனால் அவர்கள் மேடைக்கு வரவில்லை என அண்ணாமலை கூறினார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Views: - 823

0

0