மங்களகரமான நாட்களிலும் பத்திரப்பதிவு அலுவலகங்கள் திறப்பு… ஆனால் கூடுதல் கட்டணம் : தமிழக அரசு அதிரடி..!!

13 April 2021, 3:58 pm
tn secretariat- updatenews360
Quick Share

சித்திரை முதல் தேதி, ஆடிப்பெருக்கு, தைப்பூசம் உள்ளிட்ட மங்களகரமான நாட்களில் பத்திரப்பதிவுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வணிக வரி மற்றும் பதிவுத்துறை முதன்மை செயலர் பீலா ராஜேஷ் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது :- வணிக வரி மற்றும் பதிவுத் துறையின்‌ வருவாயை பெருக்கும்‌ நோக்கில்‌, சித்திரை முதல்‌ தேதி, ஆடிப்பெருக்கு மற்றும்‌ தைப்பூசம்‌ ஆகிய மங்களகரமான நாட்களில்‌ பதிவு அலுவலகங்களை செயல்பாட்டில்‌ வைத்தால்‌, பதிவு பொதுமக்களால்‌ சொத்து பரிமாற்றம்‌ குறித்த ஆவணங்கள்‌ பதிவுக்கு தாக்கல்‌ செய்திட ஏதுவாக இருக்கும்‌ என்றும்‌, அத்தகைய தினங்களில்‌ பதிவு அலுவலகங்களை செயல்பாட்டில்‌ வைத்திடவும்‌, அத்தகைய விடுமுறை நாட்களில்‌ மேற்கொள்ளப்படும்‌ ஆவணப்‌ பதிவுகளுக்கு பதிவுச்‌ சட்டத்தின்‌ கீழ்‌ உள்ள Table of Fees இனம்‌ 17(3)-ன்‌ a,b,c-ல்‌ கூறப்பட்டவாறு கூடுதல்‌ கட்டணம்‌ வசூலிக்கவும்‌ அனுமதிக்குமாறு கோரப்பட்டது.

அதன்‌ அடிப்படையில்‌, தங்களின்‌ கோரிக்கையினை அரசு கவனமுடன்‌ பரிசீலனை செய்ததில்‌, சித்திரை முதல்‌ தேதி , ஆடிப்பெருக்கு மற்றும்‌ தைப்பூசம்‌ ஆகிய மங்களகரமான நாட்களில்‌ பதிவு அலுவலகங்களை செயல்பாட்டில்‌ வைத்து பதிவினை மேற்கொள்ளவும்‌ மற்றும்‌ அத்தகைய நாட்களில்‌ மேற்கொள்ளப்படும்‌ ஆவணப்பதிவுகளுக்கு கூடுதல்‌ கட்டணம்‌ வசூலிக்கவும்‌ அனுமதி அளிக்கப்படுகிறது, என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 81

0

0