ஈவுஇரக்கமின்றி நாயை கட்டையால் அடித்தே கொன்ற கொடூரன் : வைரலாகும் அதிர்ச்சி வீடியோ.. கைது செய்ய வலுக்கும் கோரிக்கை

22 January 2021, 4:15 pm
dog madurai - updatenews360
Quick Share

மதுரை : மதுரையில் நடுரோட்டில் நாய் ஒன்றை ஒருவர் கட்டையால் அடித்துக் கொன்று சாக்கு பையில் மூட்டை கட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வாயில்லா ஜீவன்கள் எனப்படும் வளர்ப்பு மற்றும் காட்டு விலங்குகளை துன்புறுத்துவது இந்தியாவில் தண்டனைக்குரிய குற்றமாகும். அப்படி நாட்டின் ஏதேனும் ஒரு மூளையில் விலங்குகளை கொடுமைப்படுத்துவது, சமூக வலைதளங்களின் மூலம் தெரிய வந்தால், கைது நடவடிக்கை, சிறைவாசம் என தண்டனைகள் வழங்கப்பட்டு வருகிறது.

அண்மையில், கேரளாவில் காரின் பின்னே நாயை கயிறு கட்டி இழுத்துச் சென்ற சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை தொடர்ந்து, அந்த வளர்ப்பு பிராணியின் உரிமையாளர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில், மனதை உரைய வைக்கும் நிகழ்வு ஒன்ற மதுரையில் அரங்கேறியுள்ளது. செல்லூரில் உள்ள சிவகாமி வீதியில் ஆட்டோ ஓட்டுநராக இருக்கும் விமல் ராஜ் என்பவர், நாய் ஒன்றை பெரிய கட்டையை வைத்து கொடூரமாக அடித்து துன்புறுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தலை உள்ளிட்ட பகுதிகளில் தாக்கப்பட்டதில் அந்த நாய் துடிதுடித்து உயிரை விட்டது. பிறகு, தான் கையில் வைத்திருந்த சாக்கு பையில் உயிரிழந்த நாயை மூட்டை கட்டியுள்ளார்.

வாயில்லா ஜீவன்களின் மீதான விலங்கினநேயமற்ற இந்த செயல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதைக் கண்ட விலங்கின ஆர்வலர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள், சம்பந்தப்பட்ட ஆட்டோ ஓட்டுரை கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

ஐந்தறிவு கொண்ட நாய் ஏதேனும் தவறு செய்திருந்தால், புளூ கிராஸிடம் பிடித்துக் கொடுக்கலாமே தவிர, அதனை கொல்ல யார் உரிமை கொடுத்தது என்று நெட்டிசன்கள் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். இவர் மீது எடுக்கப்படும் நடவடிக்கை, இனி வளர்ப்பு பிராணிகளை துன்புறுத்த நினைக்கும் ஒவ்வொருவருக்கும் பாடமாக இருக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Views: - 0

0

0