2021 சட்டசபை தேர்தலில் தனித்துப் போட்டி ; நாம் தமிழர் கட்சியின் சீமான் அறிவிப்பு..!

26 September 2020, 3:49 pm
seeman - updatenews360
Quick Share

எதிர் வரும் 2021 சட்டசபை தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுவதாக அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த போது அவர் கூறியதாவது :- வரும் 2021 தமிழக சட்டசபை தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்தே போட்டியிடும். எந்த காலத்திலும் அதிமுக, திமுக, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி வைக்க மாட்டோம், எனக் கூறியுள்ளார்.

சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே உள்ள நிலையில், அதிமுக, திமுக உள்ளிட்ட முக்கிய கட்சிகள், கூட்டணி மற்றும் சீட் ஒதுக்கீடு உள்ளிட்டவற்றில் முழு ஈடுபாடு காட்டி வருகின்றன.

இந்த நிலையில், இதுவரையில் தேர்தலுக்கான நடவடிக்கைகளும் எடுக்காமல் இருந்து வந்த நாம் தமிழர் கட்சி, தற்போது தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. இதையடுத்து, அக்கட்சியின் தொண்டர்கள் தேர்தலுக்கான பணிகளை தொடங்கியுள்ளனர்.