2009ல நடந்த இரண்டு மணி நேர அரசியல இப்ப பண்ணிடாதீங்க : இலங்கையில் இருந்து தமிழக முதல்வருக்கு அண்ணாமலை கடிதம்!!

Author: Udayachandran RadhaKrishnan
1 May 2022, 9:33 pm
Annamalai Letter Stalin - Updatenews360
Quick Share

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளுது. இதனால் மக்கள் கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். மேலும் ராஜபக்சே அரசை கண்டித்து பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, இலங்கை தமிழ் எம்பிக்களின் அழைப்பை ஏற்று இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். மேலும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அங்கிருந்தே கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

இலங்கைக்கு உதவ இருக்கும் விஷயத்தை அரசியல் ஸ்டண்ட் செய்ய வேண்டாம் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், இலங்கைக்கு அரிசி மற்றும் மருந்துப் பொருட்களை அனுப்புவோம் என தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றியிருப்பதை பா.ஜ.க. வரவேற்பதாக குறிப்பிட்டுள்ளார். ஆனால், மத்திய அரசு ஏற்கனவே இலங்கைக்கு ஏராளமான பொருளாதார உதவிகளை செய்து வருகிறது. எனவே, கடந்த 2009- ஆம் ஆண்டு இரண்டு மணி நேர உண்ணாவிரம் போல், அரசியல் செய்யாமல் மத்திய அரசின் மூலம் இலங்கைக்கு உதவுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

Views: - 482

0

0