தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்…. டிஆர்பி ராஜாவுக்கு முக்கிய இலாக்கா? வெளியான பரபரப்பு தகவல்!!

Author: Udayachandran RadhaKrishnan
9 May 2023, 2:13 pm
TRB Raja -Updatenews360
Quick Share

கடந்த 2021 மே 7ஆம் தேதி தமிழக முதல்வராக மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்றார். முதலமைச்சராக ஸ்டாலின் பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் கடந்த ஆண்டு அமைச்சரவையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன.

போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த ராஜ கண்ணப்பன் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக மாற்றப்பட்டார். அதேபோல பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த எஸ்.எஸ். சிவசங்கருக்கு போக்குவரத்து துறை வழங்கப்பட்டது.

இதையடுத்து உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக நியமிக்கப்பட்ட நிலையில், விரைவில் அமைச்சரவையில் அதிரடி மாற்றங்களை செய்ய முதலமைச்சர் திட்டமிட்டுள்ளார்.

இதற்கான அறிவிப்பு, கடந்த 2 ஆம் தேதி நடந்த அமைச்சரவைக்கூட்டத்தில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதில் இலாக்காக்கள் மாற்றம் குறித்து அறிவிப்பு வெளியாகவில்லை.

இந்த நிலையில் திமுக அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் ஆடியோ விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில் அவரின் பதவி பறிக்கப்படும் என்ற தகவல் வெளியானது.

ஆனால் இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் வெளியாகவில்லை. அதே போல முன்னாள் அமைச்சர் தமிழரசிக்கு இந்த முறை அமைச்சரவையில் இடம்பெறுவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் நாளை அமைச்சரவை மாற்றங்கள் குறித்து உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.

அப்போது அமைச்சர்கள் தங்கம் தென்னரசுவுக்கு நிதித்துறை, பிடிஆருக்கு தகவல் தொழில்நுட்பம், மனோ தங்கராஜ்க்கு பால்வளத்துறை என மாற்றம் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

ஒரு அமைச்சரை மட்டும் விடுவித்து, அமைச்சரவையில் இடம்பெறும் டிஆர்பி ராஜாவுக்கு தொழிற்துறை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை வெளியாகும் என கூறப்படுகிறது.

Views: - 484

0

0