ஓ…இதுக்காகத்தான் பட்டு வேட்டியா…!! ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியில் திமுக அமைச்சர்கள்… கடுமையாக விமர்சிக்கும் திராவிட இயக்க நிர்வாகிகள்..!!

18 June 2021, 5:49 pm
dmk - thirupur - updatenews360
Quick Share

திருப்பூரில் ஆர்எஸ்எஸ் சார்பு அமைப்பான சேவா பாரதி அமைப்பின் நிகழ்ச்சியில் திமுக அமைச்சர்கள் கலந்து கொண்டது பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

தமிழகத்தில் திமுகவின் கொள்கைக்கும், பாஜகவின் கொள்கைக்கும் என்றைக்குமே பொருந்ததாகும். திராவிடத்தை மையப்படுத்தி திமுகவும், இந்துத்துவாவை மையப்படுத்தி பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பும் இயங்கி வருகின்றன. இருகட்சிகள் மற்றும் அமைப்பைச் சேர்ந்த தலைவர்களும் பரஸ்பரமாக அவரவர் கொள்கைகளை விமர்சித்துக் கொள்வது வாடிக்கையானது.

இப்படியிருக்கையில், திருப்பூர் மாவட்டம் ஆர்எஸ்எஸ்.சின் சார்பு அமைப்பான சேவாபாரதி அமைப்பு சார்பில் கொரோனா கேர் செண்டர் திறப்பு விழா கடந்த 13ம் தேதி நடந்தது. இதில், யாரும் எதிர்பார்க்காத வகையில், திமுக அமைச்சர்களான மு.பெ. சாமிநாதன் மற்றும் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் பங்கேற்றனர். அவர்கள் பாரத மாதா படத்திற்கு குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்.

இது குறித்த தகவலை திருப்பூர் தெற்க தொகுதி எம்எல்ஏ செல்வராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

இந்துத்துவாவை மையப்படுத்தி செயல்படும் கட்சிக்கு எதிரான விமர்சனங்களையும், அவர்களை தலைதூக்க விடமாட்டோம் என மார்தட்டி வரும் திராவிட இயக்கத் தலைவர்களுக்கு இந்த நிகழ்ச்சி பெரும் அதிர்ச்சையை ஏற்படுத்தியதாக சொல்லப்படுகிறது.

இந்த நிகழ்வுக்கு கண்டனம் தெரிவித்து திராவிடர்‌ விடுதலைக்‌ கழகத்தின்‌ பொதுச்‌ செயலாளர்‌ விடுதலை ராஜேந்திரன்‌ வெளியிட்டுள்ள அறிக்கையில்‌ கூறியிருப்பதாவது :- கோவை மாவட்டத்தைச்‌ சார்ந்த அமைச்சர்கள்‌, வெள்ளக்கோவில்‌ சாமிநாதன்‌, கயல்விழி, திருப்பூர்‌ திமுக சட்டமன்ற உறுப்பினர்‌ செல்வராஜ்‌ மாவட்ட ஆட்சித்‌ தலைவர்‌ காவல்‌ துறை அதிகாரிகள்‌ படை சூழ ‘சேவா பாரதி’ என்ற ஆர்‌.எஸ்‌.எஸ்‌ அமைப்பு நடத்திய நிகழ்ச்சியில்‌ பங்கேற்று பாரத மாதா படத்துற்கு பூஜை செய்திருக்கிறார்கள்‌. அமைச்சர்‌ சாமிநாதன்‌ தன்னுடைய கருப்பு, சிவப்பு அடையாள வேட்டு கூட இருந்துவிடக்‌ கூடாதென்று பட்டுவேட்டி சகிதமாக பங்கேற்று இருக்கிறார்‌.

மக்கள்‌ நலத்திட்டங்களை எந்த அமைப்பு செய்தாலும்‌ அதல்‌ பங்கேற்பதில்‌ எந்த தவறும்‌ இல்லை. ஆனால்‌ கூட்டாட்சி தத்துவத்தை வலியுறுத்து ஒன்றிய அரசு தான்‌ இந்தியாவில்‌ நடக்கிறது என்பதை இலட்சிய முழக்கமாக திமுக கொண்டிருக்கிற நிலையில்,‌ இந்தியா ஒற்றை தேசம்‌ என்று கூறி அதன்‌ குறியீடாக பாரத மாதாவை முன்‌ நிறுத்துகிற ஆர்‌.எஸ்‌.எஸ்‌ அமைப்பில்‌, பாரத மாதா படத்திற்கு மாலையிட்டு பங்கேற்பது என்பது திமுக ஏற்றுக்கொண்டிருக்கிற கொள்கைக்கு அவமதிப்பு என்றே நாம்‌ கருத வேண்டி இருக்கிறது.

மற்றொன்று, திராவிடர்‌ விடுதலைக்‌ கழகத்‌ தலைவர்‌ முகநூலில்‌ பதிவிட்டிருக்கிற செய்தி, திராவிட இயக்க ஆதரவு, இமுக ஆதரவு என்ற போர்வையில்‌ பதுங்கி கொண்டு தமிழ்‌ ஈழ விடுதலைப்‌ புலிகளையும்‌ அதன்‌ தலைவர்‌ மேதகு பிரபாகரன்‌ அவர்களையும்‌ இழிவுபடுத்தி, கொச்சைப்படுத்தி முகநூலில்‌ ஒரு இயக்கத்தையே நடத்திக்‌ கொண்டிருக்கிற சுப்ரமணியசாமி சீடர்கள்‌ மீதும்‌ திமுக தனது கவனத்தை செலுத்து உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்‌ என்பதாகும்‌.

ஊடுருவல்களை முளையிலேயே கிள்ளி எறியாவிட்டால்‌ அது பெரும்‌ ஆபத்துகளை உருவாக்‌கிவிடும்‌ என்பதை கடமையுடனும்‌, கவலையுடனும்‌ சுட்டிக்காட்ட விரும்புகிறோம்‌’ என்று குறிப்பிட்டுள்ளார்‌.

Views: - 374

0

0