போதைப்பொருள் மருத்துவ பரிசோதனை : சிறுநீர் மாதிரியில் தண்ணீரை கலந்து ஏமாற்ற முயற்சி…சிக்கிய நடிகை..!

12 September 2020, 11:37 am
drug-case - updatenews360
Quick Share

பெங்களூரூ : போதைப் பொருள் பயன்பாடு குறித்து அறிவதற்காக எடுக்கப்பட்ட சிறுநீர் மாதிரியில் தண்ணீரை கலந்து ஏமாற்ற முயற்சித்த நடிகையின் நாடகம் அம்பலமானது.

சட்டவிரோத போதைப் பொருள் சப்ளை விவகாரத்தில் நடிகைகள் ராகினி திவேதி மற்றும் சஞ்சனா கல்ராணி ஆகியோரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது என்பது பற்றி தெரிந்து கொள்ள, அவர்களை காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். இருவரும் மடிவாளா மகளிர் கைதிகள் காப்பகத்தில் அடைக்கப்பட்டுள்ளனர்.

Sanjana-Galrani - updatenews360

இதனிடையே, நீதிமன்ற ஆணைப்படி, நடிகைகள் ராகினி திவேதி, சஞ்சனா கல்ராணி ஆகிய இருவரும் மருத்துவ பரிசோதனைக்காக பெங்களூரூ கே.சி. அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். அப்போது, நடிகை சஞ்சனா மருத்துவ பரிசோதனைக்கு ஒத்துழைக்க மறுத்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர், நீதிமன்ற உத்தரவை காண்பித்த பிறகு, அமைதியாக மருத்துவ பரிசோதனை செய்து கொண்டார்.

இதைத் தொடர்ந்து, மற்றொரு நடிகையான ராகினி திவேதியிடம் சிறுநீர் மாதிரி பெறப்பட்டது. அப்போது, அவர் தனது சிறுநீர் மாதிரியில் தண்ணீரை கலந்து கொடுத்துள்ளார். இதையறிந்த மருத்துவர்கள், அவரை கே.சி. பொது மருத்துவமனையில் ஒப்படைத்தனர். அங்கு மீண்டும் அவரிடம் சிறுநீர் மாதிரி எடுக்கப்பட்டது.

ராகினியின் நடத்தை வெட்கக்கேடானது எனக் குறிப்பிட்ட விசாரணை அதிகாரி, போலீஸ் காவலை நீட்டிக்க கோரிய மனுவில், இந்த சம்பவத்தையும் குறிப்பிட்டுள்ளதாகவும், அதன்பேரில், மேலும் 3 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

Views: - 11

0

0