ஆர்யன்கானை அக்.,30 வரை சிறையில் அடைக்க உத்தரவு… அனன்யா பாண்டேவை சுற்றி வளைக்கும் என்சிபி : போதைப்பொருள் வழக்கில் விறுவிறு!!
Author: Babu Lakshmanan21 October 2021, 7:09 pm
போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ஆர்யன்கானை அக்டோபர் 30ம் தேதி வரை சிறையில் அடைக்க மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மும்பையில் இருந்து கோவா செல்லும் சொகுசு கப்பல் ஒன்றில் போதைப் பொருள் தடுப்பு பிரிவினருக்கு நடத்திய சோதனையில், போதைப் பொருட்களை பயன்படுத்திய 8 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன்கான், அர்பாஸ் செத் மெர்ச்சன்ட், முன்முன் தாமெக்கா உள்ளிட்ட பிரபலங்களும் சிக்கினர்.
இதையடுத்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஷாருக்கான் மகன் ஆர்யன்கானுக்கு 14 நாட்கள் போலீஸ் காவல் விதிக்கப்பட்டது. அதன்பேரில், அவரை போலீசார் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். இதனிடையே, மும்பை உயர்நீதிமன்றத்தில் ஆர்யன்கான் தரப்பில் 2வது முறையாக தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்த நிலையில், போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ஆர்யன்கானை அக்டோபர் 30ம் தேதி வரை சிறையில் அடைக்க மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதனிடையே, ஆர்யன்கானின் செல்போன் மற்றும் விசாரணையில் கிடைத்த தகவலின் அடிப்படையில், மும்பையில் நடிகர் ஷாருக்கான், நடிகை அனன்யா பாண்டே ஆகியோரின் வீட்டில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதைத் தொடர்ந்து, என்சிபி அலுவலகத்தில் அனன்யா பாண்டே ஆஜரானார். அவரிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அவரை நாளை மீண்டும் ஆஜராக உத்தரவு பிறப்பித்தனர்.
ஏற்கனவே போதைப் பொருள் விவகாரத்தில் பல பாலிவுட் பிரபலங்களுக்கும் தொடர்பு இருப்பதாக தகவல் வெளியாகி வரும் நிலையில், ஆர்யன்கான் நீட்டிப்பு தற்போது பிரபல நடிகையின் பெயர் என்சிபியின் விசாரணை பட்டியலில் இடம்பெற்றிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
0
0