இந்தியாவில் இருந்து துபாயிக்கு 15 நாட்களுக்கு விமான போக்குவரத்திற்கு தடை

18 September 2020, 12:44 pm
Air_India_Updatenews360
Quick Share

அடுத்த 15 நாட்களுக்கு இந்தியாவில் இருந்து துபாயிக்கு விமானப் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உலக நாடுகளிடையே கொரோனா அதிகம் பரவி வரும் நாடுகளில் ஒன்றாக இந்தியா இருந்து வருகிறது. எனவே, இந்தியாவில் இருந்து வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், இந்தியாவில் இருந்து துபாயிக்கு சென்ற விமானங்களில் பயணித்த விமானப் பயணிகளில் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, கொரோனா பரவலை தடுக்கும் விதமாக,
இந்தியாவில் இருந்து துபாய்க்கு 15 நாட்கள் விமானங்கள் வர துபாய் அரசு தடை விதித்துள்ளது.

மேலும், விமானத்தில் கொரோனா பாதித்தவர்களை ஏற்றி வருவதை தடுப்பதற்காக எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை சமர்பிக்குமாறு ஏர் இந்தியாவிடம் துபாய் அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Views: - 5

0

0