வரும் 9ம் தேதி தி.மு.க.வின் புதிய பொதுச்செயலாளர், பொருளாளர் பொறுப்பேற்பு..!

5 September 2020, 5:21 pm
durai murugan - tr balu - updatenews360
Quick Share

சென்னை : தி.மு.க.வின் முக்கிய பொறுப்புகளான பொதுச்செயலாளர், பொருளாளர் பதவிகளுக்கு தேர்வு செய்யப்பட்ட துரைமுருகனும், டி.ஆர். பாலுவும் பொறுப்பேற்க உள்ளனர்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு தி.மு.க.வில் நிரப்பப்படாமல் இருந்த முக்கிய இரு பொறுப்புகள் அண்மையில் நிரப்பப்பட்டன. கனிமொழி, ஆ. ராசா உள்ளிட்டோர் கட்சியின் பொருளாளர் பதவிக்கு போட்டியிடுவார்கள் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பொருளாளராக டி.ஆர். பாலுவும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். அதேபோல, தி.மு.க.வின் பொதுச்செயலாளராக துரைமுருகனும் போட்டியின்றி தேர்வானார்.

தி.மு.க.வின் முக்கிய இரு பதவிகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள இரு தலைவர்களுக்கும் வாழ்த்துக்களை பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில், வரும் 9ம் தேதி தி.மு.க.வின் பொதுக்குழு கூடுவதாக அக்கட்சியின் தலைவர் முக ஸ்டாலின் அறிவித்தார். இந்தக் கூட்டத்தில், தி.மு.க. பொதுச்செயலாளராக துரைமுருகனும், பொருளாளராக டி.ஆர். பாலுவும் முறைப்படி அறிவிக்கப்பட்டு, இருவரும் பொறுப்பேற்க உள்ளனர்.

Views: - 0

0

0