இப்படியும் பெறலாம் இ பாஸ்…! அந்த 3 காரணங்களை வெளியிட்ட தமிழக அரசு

9 August 2020, 11:00 am
tn secretariat- updatenews360
Quick Share

சென்னை: பணி, வியாபாரம் மற்றும் புலம்பெயர் தொழிலாளர்கள் என்ற அடிப்படையில் இ பாஸ் பெறலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனாவின் பாதிப்பு காரணமாக, ஆகஸ்ட் இறுதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மாவட்ட எல்லைகள் அடைக்கப்பட்டு உள்ளன. மாவட்டங்களுக்குள் செல்ல வேண்டும் என்றால் இ பாஸ் பெற வேண்டும்.

ஆனால் அவசர தேவைகளுக்காக செல்ல வேண்டுவோர் இ பாஸ் பெறுவதில் பல சிக்கல்களுக்கு ஆளாகின்றனர். இ பாஸ் வழங்குவதில் உள்ள நடைமுறை சிக்கல்கள், முறைகேடுகள் நடப்பதாக தொடர்ந்து சர்ச்சைகள் எழுந்தன. சாதாரண மக்களுக்கு கிடைக்காத இ பாஸ்கள், இடைத்தரகர்கள் மூலம் பல ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படுவதாகவும் புகார்கள் எழுந்தன.

ஆகையால் இ பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி இருந்தார். இது குறித்து கருத்து தெரிவித்து இருந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டு இருந்தார்.

அவர் கூறியதாவது: தொழிலாளர்களுக்கான இ பாஸ் மாதம் ஒருமுறை மட்டும் புதுப்பிக்கப்பட்டால் போதும். வெளி மாநில தொழிலாளர்கள் இ பாஸ் முறையில் தாராளமாக அழைத்து வரலாம். இ பாஸ் நடைமுறைகள் எளிமைப்படுத்தப்படும் என்றார்.

இதையடுத்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:  ஏற்கனவே உள்ள காரணங்களோடு இப்போது மேலும் சில காரணங்களுக்காவும் இ பாஸ் வழங்கப்படும்.

பணி, வியாபாரம் மற்றும் புலம்பெயர் தொழிலாளர்கள் என்ற காரணங்கள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் 36 சதவீதம் அதிகமாக இ பாஸ்கள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Views: - 32

0

0