திமுகவுக்கு அடுத்த தலைவலி..! ஆ.ராசாவைத் தொடர்ந்து தயாநிதி மாறனின் சர்ச்சைப் பேச்சு குறித்து தேர்தல் ஆணையம் நோட்டீஸ்..!

1 April 2021, 4:06 pm
Dayanidhi_Maran_Updatenews360
Quick Share

ஆ.ராசா விவகாரத்தால் திமுக ஆட்டம் கண்டுள்ள நிலையில், அடுத்த தலைவலியாக தயாநிதி மாரணம் மறைந்த முதல்வர் ஜெயலலிதா மற்றும் பாரத பிரதமர் மோடி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியது குறித்து தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சட்டமன்றத் தேர்தல் தொடங்கினாலும் தொடங்கியது, திமுகவின் உயர்மட்டத் தலைவர்கள் பலர் தொடர்ந்து விமர்சனம் என்ற பெயரில் தரம் தாழ்ந்த வகையில் பேசுவது தினசரி சம்பவம் போல் மாறி விட்டது.

திமுகவின் தமிழன் பிரசன்னா ஆரம்பித்து வைத்த இந்த அருவருக்கத்தக்க அரசியல் பேச்சு தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. தமிழன் பிரசன்னா அரசியல் தலைவரை மையப்படுத்தி பேசியதால் அது குறித்து யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளாத நிலையில், திமுக எம்பி ஆ.ராசா முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது விமர்சனம் வைப்பதாகக் கூறி, அவரின் தாயை கொச்சைப்படுத்தும் வகையில் பேசியதற்கு தமிழகம் முழுவதும் எதிர்ப்புக் கிளம்பியது.

தமிழகம் முழுவதும் இந்த விவகாரம் எதிரொலித்த நிலையில், தேர்தலில் இது எதிரொலித்து விடும் எனப் பயந்த திமுக ஆ.ராசாவை மன்னிப்பு கேட்க வைத்து விவகாரத்தை அமுக்கப் பார்த்ததாகக் கூறப்பட்டது. எனினும் விடாத அதிமுகவினர் தேர்தல் ஆணையம் வரை சென்று, ஆ.ராசா பிரச்சாரம் செய்வதற்கு 48 மணி நேரம் தடை பெற்று, திமுகவிற்கு தண்டனை பெற்றுக்கொடுத்துள்ளனர். 

இந்நிலையில், தற்போது முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக எம்பியுமான தயாநிதி மாறன், கடந்த 28’ஆம் தேதி, கிணத்துக்கடவு தொகுதியில் பிரசாரம் செய்த போது பேசிய சர்ச்சைக்குரிய கருத்தால் திமுகவிற்கு அடுத்த தலைவலி ஆரம்பித்துள்ளது. 

கிணத்துக்கடவு தொகுதியில் பேசிய தயாநிதி மாறன், அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறியதை மேற்கொள் காட்டி, ஜெயலலிதாவையும், மோடியையும் சர்ச்சைக்குரிய விதத்தில் விமர்சித்திருந்தார்.

இதையடுத்து, “தேர்தல் நடத்தை விதிகளை மீறி பேசிய, தயாநிதி மாறன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தயாநிதி மாறன் பிரச்சாரம் செய்ய தடை விதிக்க வேண்டும்.” என, அதிமுக செய்தி தொடர்பாளர் பாபுமுருகவேல், நேற்று தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹுவிடம், புகார் மனு கொடுத்தார்.

அதன் அடிப்படையில், தயாநிதி மாறன் பேச்சு குறித்து, விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு, கோவை மாவட்ட தேர்தல் அலுவலருக்கு, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

Views: - 36

0

0