இரட்டை இலை தொடர்பான வழக்கு : சுகேஷ் வீட்டில் ரூ.82 லட்சம் ரொக்கம், 2 கிலோ தங்கம், எண்ணற்ற சொகுசு கார்கள்.. ஆடிப் போன அமலாக்கத்துறை!!

Author: Udayachandran RadhaKrishnan
23 August 2021, 8:28 pm
Sukesh Chandrasekar -Updatenews360
Quick Share

சென்னை : இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் தர முயன்ற புகாரில் கைதான சென்னை கானாத்தூரிரை சேர்ந்த சுரேஷ் சந்திரசேகர் வீட்டில் 2 கிலோ தங்கம், ரூ.82 லட்சம் பணம், 20 கார்கள், ஒரு லேப்டாப் ஆகியவற்றை அமலாக்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

கர்நாடகா மாநிலம் பெங்களூருவை சேர்ந்த சுகாஷ் சந்திரசேகர் எமீது பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவு, சிபிரு அமலாக்கத்துறை ஆகிய அமைப்புகள் மோசடி வழக்குகள் பதிச செய்தன. இதுவரை 21 வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளான்.

கடந்த 2013ஆம் ஆண்டு சென்னையில் போலி ஆவணங்கள் கொடுத்து 20 கோடி ரூபாயை வங்கியில் கடன் பெற்று மோசடி செய்ததாக அவன் மீதும், அவனது காதலி நடிகை லீனா மரியம்பால் கைது செய்யப்பட்டனர்.

பின்னர் கடந்த 2018ஆம் ஆண்டு தேர்தல் ஆணையத்தால் முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தை மீட்டு தருவதாக கூறி டிடிவி தினகரனிடம் 50 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்க முயன்ற விவகாரத்தில் இடைத்தரகராக செயல்பட்ட புகாரிலும் சுகேஷ் கைது செய்யப்பட்டான்.

திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இவன், ஜாமீனில் அவ்வப்போது வெளியே வந்தும் 200 கோடி ரூபாய் மோசடி செய்யதாக டெல்லி போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். இது மட்டுமல்லாமல் சட்டவிரோத பணபரிமாற்றம் என்ற சட்டப்பிரிவில் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தனர்.

மேலும் அமலாக்கத்துறை சுகேஷ் சந்திரசேகருக்கு தொடர்பான இடங்களில் சோதனை நடத்தினர். இன்று சென்னையில் கானாத்தூர் அருகே பண்ணை வீட்டில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையில், 20க்கும் மேற்பட்ட சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

பிம்டிபிள்யூ, ரோல்ஸ் ராய்ஸ், பென்ஸ், பெராரி, லேண்ட் க்ரூஸர் போன்ற சொகுசு கார்கள் உட்பட சினிமா படப்பிடிப்பில் பயன்படுத்தப்படும் கேரவேன் என ரகரகமான கார்கள் சிக்கின.

தற்போது திகார் சிறையில் இருக்கும் சுகேஷ், அவ்வப்போது இந்த பண்ணை வீட்டு வந்து தங்குவது வழக்கம். பண்ணை வீட்டை சுற்றி இருபது அடி உயரத்திற்கு தடுப்பு சுவர் அமைத்து யாரும் உள்ளே செல்லாதபடி மின்கம்பிகள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த பண்ணை வீட்டில்தான் மோசடி தொடர்பான முக்கிய நபர்களை அழைத்து சந்திப்பு நடைபெறும் என்றும் கூறப்படுகிறது. தற்போது அமலாக்கத்துறை பண்ணை வீட்டில் பொருத்தப்பட்டுள்ள மேகராவினை ஆய்வு செய்து வருகின்றனர்.

சுகேஷ் சந்திரசேகருக்கு தொடர்பாக சென்னையில் மேலும் சில இடங்களில் சோதனை நடத்தி வரும் அமலாக்கத்துறையினர், 2 கிலோ தங்கம், கணக்கில் வராத ரூ.82 லட்சம் ரொக்கம், சுகேஷ் பயன்படுத்திய லேப்டாப் மற்றும் முக்கிய ஆவணங்களை கைப்பற்றியுள்ளனர்.

Views: - 362

0

0