கரூர் to ஆந்திரா ரகசியப் பயணம் : கைமாறிய ஃபைல்கள்… அமைச்சர் செந்தில் பாலாஜியை நெருங்கும் அமலாக்கத்துறை..!!

Author: Babu Lakshmanan
24 November 2021, 5:10 pm
Quick Share

சென்னை : அமைச்சர் செந்தில்பாலாஜி மீதான மோசடி வழக்கு ஒன்றை அமலாக்கத்துறை மீண்டும் கையில் எடுத்துள்ளது.

திமுக ஆட்சியமைந்த பிறகு மின்சாரத்துறை அமைச்சராக செந்தில் பாலாஜி பொறுப்பேற்றுக் கொண்டார். இதைத் தொடர்ந்து, அவர் கோவை மாவட்ட வளர்ச்சிக்கான பொறுப்பாளராகவும் முதலமைச்சர் ஸ்டாலினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே, கடந்த 2011-15ஆம் ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது, போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 81 பேரிடம் ரூ.1.62 கோடி மோசடி செய்ததாக செந்தில் பாலாஜி மீது வழக்கு ஒன்று நடந்து வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக அண்மையில் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார்.

Senthil Balaji- Updatenews360

இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி மீதுள்ள மோசடி வழக்கு ஒன்று அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வந்துள்ளது. இந்த வழக்கு அப்படியே கிடப்பில் போடப்பட்டிருந்த நிலையில், தற்போது அதனை அதிகாரிகள் தூசித்தட்ட தொடங்கியுள்ளனர்.

அதாவது, டெல்லி மேலிடத்தில் உள்ள ஹிட் லிஸ்டில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் பெரும் உள்ளதாம்.

மதுரை அமலாக்கத்துறையில் நடைபெற்று வந்த வழக்கை, ஹரிஷ் என்ற அதிகாரி விசாரித்து வந்ததாகவும், இந்த சூழலில், அமைச்சருக்கு நெருக்கமானவர்கள் கரூரில் இருந்து அதிகாரி ஹரிஷின் சொந்த ஊரான ஆந்திராவுக்கு ரகசியப் பயணம் மேற்கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, அந்த வழக்கை அதிகாரி ஹரிஷ் கிடப்பில் போட்டதாகவும் சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், இந்த தகவலை அறிந்த டெல்லி வட்டாரங்கள், சென்னை அமலாக்கத்துறைக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கை மாற்றியதுடன், விரைந்து விசாரித்து நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகளுக்கு வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறதாம்.

எனவே, அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு விரைவில் சம்மன் அனுப்பப்பட்டு, விசாரணையை துரிதப்படுத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் அவர் கைது செய்யப்படவும் முகாந்திரம் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது அமைச்சருக்கும், திமுகவினருக்கும் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 287

0

0