அவசர அவசரமாக பிரதமர் மோடியை சந்தித்தது எதற்கு…? போட்டுடைத்த ஓபிஎஸ் – இபிஎஸ்..!!

Author: Babu
26 July 2021, 5:51 pm
eps - ops - meet - updatenews360
Quick Share

டெல்லியில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக எதிர்கட்சி குழுவினர் பிரதமர் மோடியை சந்தித்தற்கான காரணத்தை தெரிவித்துள்ளனர்.

சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுதலையாகி வந்த சசிகலா அரசியலில் இருந்து விலகிக் கொள்வதாக அறிவித்தார். ஆனால், சட்டப்பேரவை தேர்தலுக்கு பிறகு அடிக்கடி ஆடியோ வெளியிட்டு அதிமுகவுக்குள் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறார். அதேவேளையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இடையே பனிப்போர் நிலவி வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், ஓபிஎஸ்ஸை தொடர்ந்து இபிஎஸ்ஸும் டெல்லிக்கு பயணம் மேற்கொண்டது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடியை இருவரும் சந்தித்து பேசினர். அப்போது, தமிழக அரசியல் நிலவரம் மற்றும் அரசியல் மாற்றங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார். அப்போது, காவிரியின் குறுக்கே கட்டப்படும் மேகதாது அணை பிரச்சனை, நீட் தேர்வு ரத்து விவகாரம், தடுப்பூசி தட்டுப்பாடு, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை உள்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமரிடம் வழங்கினர்.

இந்த சந்திப்பிற்கு பிறகு ஓபிஎஸ் – இபிஎஸ் இணைந்து செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, அவர்கள் பேசியதாவது :- தமிழகத்திற்கு தேவையான தடுப்பூசிகளை வழங்க வேண்டும். மேகதாது அணைக்கு மத்திய அரசு அனுமதி வழங்கக் கூடாது. தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையின் தாக்குதலை தடுத்து நிறுத்த வலியுறுத்தியுள்ளோம். அதேபோல, கோதாவரி – காவிரி நதிநீர் இணைப்பு திட்டத்தை செயல்படுத்த கோரிக்கை விடுத்துள்ளோம்.

எங்களின் இயக்கம் கட்டுக் கோப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது. கட்சியின் தலைமை மீது தொண்டர்கள் யாருக்கும் அதிருப்தி இல்லை. லாட்டரி சீட்டுகளை தமிழக அரசு கொண்டு வர இருப்பதாக தகவல் வெளியானது. எனவே, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டோம், என தெரிவித்தார்.

Views: - 304

0

0