நீட் தேர்வில் விலக்கு பெற முயற்சிய எடுங்க… நாங்க துணை நிற்கிறோம் : முதலமைச்சர் ஸ்டாலினிடம் எடப்பாடி பழனிசாமி உறுதி..!!

23 June 2021, 6:24 pm
EPS - stalin - updatenews360
Quick Share

நீட் தேர்வுக்கு எதிராக தமிழக அரசு எடுக்கும் முயற்சிக்கு அதிமுக துணைநிற்கும் என்று எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உறுதியளித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் கடந்த 21ம் தேதி முதல் நடந்து வருகிறது. 3ம் நாளான இன்று நடப்பாண்டில் நீட் தேர்வு நடக்குமா..? என்று எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், பிரதமரை நேரில் சந்தித்த போது, நீட் தேர்வு வேண்டாம் என வலியுறுத்தினேன். நீட் தேர்வில் விலக்கு பெற போராடுவோம். வெற்றி பெறுவோம். அதற்கு அதிமுகவும் துணை நிற்க வேண்டும், எனக் கூறினார்.

ஸ்டாலினின் பேச்சை தொடர்ந்து பேசிய எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, “நீட் தேர்வுக்கு விலக்கு பெறும் முயற்சிக்கு தமிழக அரசுக்கு அஇஅதிமுக துணை நிற்கும்,” என்றார்.

Views: - 165

0

0