பெண்களுக்கு பாதுகாப்பான நகரமாக சென்னை திகழ்கிறது : முதலமைச்சர் பழனிசாமி பெருமிதம்!!

Author: Babu Lakshmanan
29 March 2021, 1:50 pm
eps - updatenews360
Quick Share

சென்னை : பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பான நகரமாக சென்னை திகழ்ந்து வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரமே இருப்பதால் அரசியல் கட்சியினர் மிகவும் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர். அந்த வகையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சென்னை மயிலாப்பூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் நடராஜை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது, அவர் பேசியதாவது :- தமிழகத்தில் அரசு செய்து முடித்த திட்டங்களை சொல்லி வாக்கு சேகரித்து வருகிறோம். திமுக ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்காது. சென்னையில் சிசிடிவி கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளதால், குற்றங்கள் குறைந்துள்ளன. சென்னையில் மட்டும் குற்றங்களை தடுக்க 2.5 லட்சம் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

சென்னை அமைதிப்பூங்காவாக இருந்தால் தான் தொழில்துறை வளர்ச்சியடையும். போக்குவரத்து நெரிசலை குறைக்கவே, மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது.

தமிழகத்தில் தடையில்லா மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. இல்லத்தரசிகளின் சுமையை குறைக்க தேர்தல் அறிக்கையில் பல்வேறு திட்டங்கள் உள்ளன. மேயராக இருந்த போதும் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தபோதும் சென்னைக்கு ஸ்டாலின் எதுவும் செய்யவில்லை, என்று அவர் தெரிவித்தார்.

Views: - 177

0

0