மக்கள் நலனுக்கு எதிரான செயல்… கண்ணை மூடி வேடிக்கை பார்த்து கொண்டு இருக்க முடியாது : இபிஎஸ் கொந்தளிப்பு

Author: Babu Lakshmanan
22 April 2023, 3:33 pm
EPS Vs Stalin - Updatenews360
Quick Share

தொழிலாளர் விரோத சட்டத்தை உடனடியாக திமுக அரசு திரும்ப பெற வேண்டும் என்று எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தனியார் நிறுவனங்களில் தொழிலாளர்களின் வேலை நேரத்தை 12 மணி நேரமாக மாற்றம் செய்யும் தொழிற்சாலை சட்ட மசோதா தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவுக்கு பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகளோடு, திமுகவின் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, விசிக உள்ளிட்ட கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன.

மேலும், திமுக அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக கூட்டணி கட்சிகளும் வெளிநடப்பு செய்தன. இதைத் தொடர்ந்து, இதனைத் தொடர்ந்து குரல் வாக்கெடுப்பு மூலம் இந்த சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. இருப்பினும் இந்த சட்ட மசோதாவிற்கு எதிராக தொடர்ந்து குரல் எழுப்பி வருகின்றன.

இந்நிலையில் தி.மு.க. அரசு மக்கள் நலனுக்கு எதிராக செயல்படுவதை கண்மூடி வேடிக்கை பார்க்க முடியாது என எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது : – தி.மு.க. அரசு மக்கள் நலனுக்கு எதிராக செயல்படுவதை கண்மூடி வேடிக்கை பார்க்க முடியாது என்றும் தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள தொழிலாளர் விரோத சட்டத்தை உடனடியாக அரசு திரும்ப பெற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் தமிழக தொழிலாளர்களின் நலன் காக்க அ.தி.மு.க. எல்லா முயற்சிகளையும் மேற்கொள்ளும், என தெரிவித்துள்ளார்.

Views: - 267

0

0