ஜெயலலிதா கோவில் திறப்பு விழா: இன்று மதுரை வருகிறார் முதலமைச்சர் பழனிசாமி..!!

30 January 2021, 8:27 am
j temple - updatenews360
Quick Share

மதுரை: ஜெயலலிதா கோவில் திறப்பு விழாவுக்காக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று மதுரை வருகிறார்.

தமிழக வருவாய்த்துறை மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஏற்பாட்டின் பேரில் ஜெயலலிதா பேரவை மற்றும் அம்மா சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பாக மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு கோவில் கட்டப்பட்டுள்ளது.

இந்த கோவில் மதுரை திருமங்கலம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட டி.குன்னத்தூரில் சுமார் 12 ஏக்கரில் கட்டப்பட்டுள்ளது. இந்த கோவிலில் ஜெயலலிதா மற்றும் எம்.ஜி.ஆருக்கு சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு சிலையும் சுமார் 400 கிலோ எடையில் முழு உருவ வெண்கல சிலையாக நிறுவப்பட்டுள்ளன. இந்த கோவில் திறப்பு விழா இன்று நடைபெறுகிறது.

அதற்காக யாக சாலை பூஜைகள் தொடங்கி நடந்து வருகின்றன. இந்த கோவிலை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் இன்று காலை 10.30 மணிக்கு திறந்து வைக்கின்றனர். அதன்பின் நடக்கும் கோ-பூஜையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்கிறார்.

தொடர்ந்து அவர், கட்சியின் மூத்த கட்சி நிர்வாகிகளுக்கு பொற்கிழி வழங்குகிறார். அங்கு தமிழக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடக்கிறது. அதில் முதலமைச்சர், தமிழக அரசின் சாதனை திட்டங்கள் குறித்து விளக்கி பேசுகிறார்.

Views: - 60

0

0