எந்த பொய் வழக்கை போட்டாலும் அதிமுகவை அசைக்க முடியாது : எடப்பாடி பழனிசாமி அதிரடி

Author: Babu Lakshmanan
19 October 2021, 5:22 pm
eps - salem - updatenews360
Quick Share

சேலம் : பொய் வழக்குகளைக் கண்டு அதிமுக அஞ்சாது என்று எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அதிமுக பொன்விழா நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே நடந்த நிகழ்ச்சியில் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். அப்போது, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் திருவுருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பிறகு செய்தியாளர்களிடம் அவர் பேசினார்.

அவர் பேசியதாவது :- சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டப்பேரவை தொகுதிகளில் 10ல் அதிமுகவிற்கு பொதுமக்கள் வெற்றி தேடித் தந்துள்ளீர்கள். கொரோனா காலம் என்பதால், வாக்களித்த மக்களுக்கு அப்போது நன்றி தெரிவிக்க முடியவில்லை. தற்போது, அனைவரிடமும் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் மீது திமுக அரசால் பொய் வழக்கு போடப்படுகிறது. இந்தப் பொய் வழக்குகளுக்கு எல்லாம் அதிமுக அஞ்சாது. எம்ஜிஆர் இருக்கும் போது பல்வேறு சோதனைகளை எதிர்கொண்டார். அதனையெல்லாம் உடைத்தெறிந்து சரித்திர படைத்து, அதிமுகவை உருவாக்கினார்.

தற்போது நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தல் ஜனநாயக முறைப்படி நடந்ததா..? அதிமுக ஆட்சி காலத்தில் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்தப்பட்டது. தற்போதைய தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களும், தோல்வியடைந்தவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர், எனக் கூறினார்.

Views: - 284

0

0