தமிழக அரசால் மாணவர்களின் மருத்துவக் கனவு கேள்விக்குறி : எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

13 July 2021, 8:02 pm
tuticorin eps - updatenews360
Quick Share

சென்னை : தமிழக அரசால் மாணவர்களின் மருத்துவ கனவு கேள்விக்குறியாகி உள்ளதாக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

நீட் தேர்வை ரத்து செய்வதாக தேர்தல் வாக்குறுதியாக திமுக அறிவித்திருந்தது. தற்போது, தமிழக அரசு மாணவர்களுக்கு நீட் பயிற்சி தொடர்ந்து அளிக்கப்படும் என கூறியதற்கு அதிமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.

இந்த நிலையில், தமிழக அரசால் மாணவர்களின் மருத்துவ கனவு கேள்விக்குறியாகி உள்ளதாக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள டுவிட்டர் பதிவில், “இந்த ஆண்டு நீட் தேர்வு நடைபெறுமா? என முதல்வரிடம் நேரடியாகவும், ஊடகங்கள் வாயிலாகவும் பல முறை வலியுறுத்தியும் பதில் சொல்லாமல் காலம் தாழ்த்தியதன் விளைவு; இன்று மாணவர்களின் மருத்துவக்கனவு கேள்விக்குறியாகி உள்ளது. எப்போதும் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத இந்த அரசு.

அதிமுக அரசு செயல்படுத்திய ‘நீட்’ தேர்வில் அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் 7.5 சதவீத இட ஒதுக்கீடு கிடைக்கப பெறுவதில் இடையூறு ஏற்படுத்தாமல், தேர்வுக்கு மாணவர்களுக்கு அதிமுக அரசு அளித்தது போல் உரிய பயிற்சிகள் வழங்கி உறுதுணையாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Views: - 101

0

0