கூட்டணியை உதறித் தள்ளும் அளவிற்கு சரத்குமார் மீது கடுப்பில் கமல்ஹாசன்.. காரணமான ராதிகா சரத்குமார்…..?

3 March 2021, 3:58 pm
Kamal - sarath kumar - updatenews360
Quick Share

அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத் குமார், அன்றைய தினமே திமுக கூட்டணியில் இருந்து விலகிய இந்திய ஜனநாயகக் கட்சியுடன் கைகோர்த்தார். ஏற்கனவே, டிடிவி தினகரன், கமல்ஹாசன் தலைமையில் 3வது அணியும் என எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில், சரத்குமார் புதியதாக 3வது அணியை உருவாகும் என அறிவித்தார். இந்தக் கூட்டணிக்கு தேமுதிக, கமல்ஹாசன் உள்ளிட்டோருக்கு நேரடியாக அழைப்பும் விடுத்தார்.

இதை தொடர்ந்து, கமல்ஹாசனை நேரில் சந்தித்து பேசிய சரத்குமார், நல்ல கட்சிகள் ஒன்றிணைந்து போட்டியிட வேண்டும் என்று கூறினார்.

Radika Sarath -Updatenews360

இதனிடையே, சமத்துவ மக்கள் கட்சியின் பொதுக்கூட்டம் தூத்துக்குடியில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் மற்றும் பொதுச்செயலாளராக சரத்குமார் மீண்டும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து, அவர் பேசியதாவது :- தூத்துக்குடி விமான நிலையத்திற்கு காமராஜர் பெயர் வைக்க வேண்டும். ஆவின் நிலையத்தில் இயற்கையான பனைபால் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். வேலைவாய்ப்பில் தமிழர்களுக்கு 90% இடஒதுக்கீடு வழங்க வேண்டும், ஐயா வைகுண்டர் அவதார தினத்தை பொது விடுமறையாக அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதோடு, சமத்துவ மக்கள் கட்சியின் வேட்பாளர்களையும் அவர் அறிவித்தார். அதன்படி, வேளச்சேரி தொகுதியில் ராதிகா சரத்குமார் போட்டியிட இருப்பதாக தெரிவித்தார். மேலும், வரும் சட்டப்பேரவை தேர்தலில் நமது கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் கமல்ஹாசன் தான் என்றும், சமத்துவ மக்கள் கட்சி தனிச்சின்னத்தில்தான் போட்டியிடும் என சரத்குமார் அறிவித்தார். மக்கள் நீதி மய்யம், சமத்துவ மக்கள் கட்சி, ஐஜேகே கூட்டணி உறுதியாகிவிட்டதாகவும், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுடன் முதல்கட்ட பேச்சுவார்ததை முடிந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

Radhika Sarathkumar- updatenews360

இதனால், கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யத்தின் 3வது அணி கூட்டணியில் சமத்துவ மக்கள் கட்சி இணைந்து விட்டதாக கருதப்பட்டது. ஆனால், சரத்குமாரின் கூட்டணி முடிவை நிராகரிப்பதை போல, கமல்ஹாசன் பதிலளித்தது சமத்துவ மக்கள் கட்சியினரை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

“கை குலுக்கிச் சென்றுவிட்டால் கூட்டணி அமைந்து விட்டதாக அர்த்தம் இல்லை,” எனக் கமல்ஹாசன் கூறியது சரத்குமாரை கூட்டணியில் சேர்க்க முடியாது அல்லது இன்னும் பல்வேறு நிபந்தனைகள் இருக்கிறது, அதன்பிறகுதான் கூட்டணியை இறுதி செய்ய முடியும் என பல்வேறு கருத்துக்கள் சொல்லப்பட்டு வருகிறது.

உண்மையில், மற்றுமொரு காரணம் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். அதாவது, கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக கமல்ஹாசனை அறிவிப்பதற்கு முன்னதாக, வேளச்சேரியில் ராதிகா சரத்குமார் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டதே, கமல்ஹாசனுக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

MNM Kamal - Updatenews360

வரும் சட்டப் பேரவை தேர்தலில் வேளச்சேரி, ஆலந்தூர் அல்லது மயிலாப்பூர் உள்ளிட்ட ஏதேனும் ஒரு தொகுதியில் கமல்ஹாசன் போட்டியிட இருப்பதாக தகவல் வெளியாகி வந்தது. ஆனால், தற்போது ஏதும் கலந்து பேசாமல், தனது மனைவிக்கு வேளச்சேரி தொகுதியை எப்படி அவர் ஒதுக்கலாம் என்பதே இப்போது பிரச்சனைக்கு காரணமாக இருந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

பொதுவாக, கூட்டணி அமைத்து போட்டியிடும் போது, சம்பந்தப்பட்ட கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகே, வேட்பாளர்களை அறிவிக்க வேண்டும். ஆனால், அதனை கடைபிடிக்காமல், தனது திட்டத்தில் மண்ணை வாரி போடுவது போல, சரத்குமாரின் செயல் இருப்பதாக கமல்ஹாசன் உணர்ந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

பொறுத்திருந்து பார்ப்போம்… 3வது அணி பட்டம் யாருக்கு…. யார் யாருக்கு அதில் இடம் என்று…

Views: - 350

0

0