தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் தமிழக மக்களுக்கு அல்வா கொடுத்த திமுக : முன்னாள் மத்திய அமைச்சர் விமர்சனம்..!!

Author: Babu Lakshmanan
2 August 2021, 1:58 pm
Quick Share

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் கோடான கோடி மக்களுக்கு திமுக அல்லா கொடுத்துவிட்டதாக முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசியதாவது :- கொரோனா தொற்றில் இருந்து நம்மையும், நம்மை சுற்றி இருப்பவர்களையும் பாதுகாக்க முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் முக்கியமானது. மத்திய, மாநில அரசுகளின் கொரோனா தடுப்பு விதிகளை மக்கள் முறையாக பின்பற்ற வேண்டும்.

நீட் தேர்வுக்கு தமிழகத்தில் வரவேற்பும், எதிர்ப்பும் கிளம்பி வரும் நிலையில், அகில இந்திய ஒதுக்கீட்டில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீட்டை பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இதன்மூலம் நமது நாட்டின் சரித்திரத்தில் மிக முக்கியமான காலகட்டத்தை பிரதமர் எட்டியுள்ளார். அதேபோல, பொருளாதாரத்தல் பின்தங்கியவர்களுக்கு 10% இடஒதுக்கீடும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு விஷயமும் ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு வரப்பிரசாதமாகும்.

Pon Radhakrishnan - Updatenews360

நீட் தேர்வை கொண்டு வந்தது காங்கிரஸ் – திமுகவும் தான். கருணாநிதியின் சுரு சுட்டு விரல் அசைவுக்கு மத்திய அரசு தலைவணங்கும் என்று அப்போதைய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூறினார். அவ்வளவு சக்தி படைத்த நீங்கள் ஏன் ஓபிசி மாணவர்கள் பற்றி கவலைப்படாமல் இருந்தீர்கள்..? இன்று நீட் பற்றி பேச திமுக மற்றும் காங்கிரசுக்கு எந்த அருகதையும் கிடையாது.

தமிழகத்தில் 2019ல் இருந்ததை விட 2020ல் கூடுதலாக 10 சதவீதம் பேர் நீட் தேர்வில் தகுதி பெற்றார்கள். கிராமப்புற மாணவர்கள் நலனுக்காக அதிமுக அரசு 7.5% இட ஒதுக்கீடு கொடுத்துள்ளது. இந்த விஷயத்தில் அடுத்த குழந்தைகளுக்கு தனது இன்சியல் போடும் வேலையை செய்ய கூடாது. திமுகவினர் எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்று தகுதி அற்றவர்கள் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் திமுக அல்வா கொடுக்கிறது. நீட் தேர்வை மத்திய அரசு கொண்டுவரவில்லை. உச்சநீதிமன்றம் வழிகாட்டுதல் படி தான் நீட் கொண்டுவரப்பட்டது. சட்டப்பேரவையில் நாடகம் ஆடுவதற்காக திமுக பயன்படுத்தி வருகிறது, என்றார்.

Views: - 372

0

0