நிதியமைச்சர் மகனுக்கு அமலாக்கத்துறை வைத்த செக் : ஆடிப்போன ஆளுங்கட்சி… அரசியலில் பரபரப்பு!!!

Author: Udayachandran RadhaKrishnan
23 August 2023, 9:20 pm
ED -updatenews360
Quick Share

நிதியமைச்சர் மகனுக்கு அமலாக்கத்துறை வைத்த செக் : ஆடிப்போன ஆளுங்கட்சி… அரசியலில் பரபரப்பு!!!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையிலான ஆட்சி நடக்கிறது. அம்மாநிலத்தின் நிதியமைச்சராக இருப்பவர் ராமேஷ்வர் ஓரான்.

இவரது மகன் ரோஹித் ஓரானுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர். ரோஹித் ஓரானுக்கு சொந்தமான இடங்களில் மதுபான கடைகள் உரிமம் தொடர்பான பண மோசடி வழக்கு தொடர்பாக சோதனை நடத்தப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ராஞ்சி, தும்கா, தியோகார் உள்ளிட்ட பல இடங்களில் உள்ள ரோஹித் ஓரானுக்கு தொடர்புடைய இடங்களில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். இதில் பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன என தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, பணமோசடி வழக்கில் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் வரும் ஆகஸ்ட் 24-ம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. முன்னதாக, ஆகஸ்ட் 14 அன்று, நில மோசடி வழக்கு தொடர்பாக ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத்துறையால் சம்மன் அனுப்பப்பட்டது.

இருப்பினும், மாநிலத்தில் சுதந்திர தின விழாவுக்குத் தயாராக வேண்டியதை காரணம் காட்டி அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. காங்கிரஸுடன் கூட்டணியில் உள்ள சோரன், மத்திய அரசுடன் ஒத்துப் போகாததால் மத்திய அமைப்புகள் தம்மை குறிவைப்பதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

Views: - 348

0

0