பொறியியல் கல்லூரிகளின் அங்கீகாரத்தை புதுப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு

14 April 2021, 7:26 pm
aicte - updatenews360
Quick Share

பொறியியல் கல்லூரிகள் தங்களின் அங்கீகாரத்தை புதுப்பித்துக் கொள்வதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

தேசிய தொழில்நுட்ப கல்வி ஆணையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் நாடு முழுவதும் 4,000த்திற்கும் மேற்பட்ட கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்தக் கல்லூரிகள் ஆண்டுதோறும் தங்களின் அங்கீகாரத்தை புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என்பது வழிமுறையாகும்.

இந்த ஆண்டுக்கான புதுப்பித்தலை தொடங்கும் விதமாக, ஏஐசிடிஇ தனது இணையதளத்தில் விண்ணப்பப் பதிவு கடந்த மார்ச் 9ம் தேதி முதல் தொடங்கியது. இதற்கான காலக்கெடு நேற்றுடன் முடிவடைய இருந்த நிலையில், ஏப்.,23ம் தேதி வரை கால அவகாசத்தை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.

Views: - 29

0

0