பொறியியல் படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் வரும் 28ம் தேதி வெளியாகிறது…?
26 September 2020, 1:31 pmசென்னை : பொறியியல் படிப்புக்கான தரசவரிசைப் பட்டியல் 28ம் தேதி வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில் சுமார் 7 மாதங்களுக்கு பிறகு கல்வி நிறுவனங்களை திறக்கும் முனைப்பில் மத்திய, மாநில அரசுகள் செயல்பட்டு வருகிறது. கல்லூரி, பல்கலைக்கழகங்களில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வரும் நவ.,1ம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
முன்னதாக, அக்.,31ம் தேதிக்குள் முதலாமாண்டு மாணவர் சேர்க்கையை நிறைவு செய்து வகுப்புகள் தொடங்கலாம் என்றும், முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு அடுத்த ஆண்டு மார்ச்சில் முதல் செமஸ்டர் தேர்வு நடத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, தமிழகத்தில் ஏற்கனவே பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வை தொழில்நுட்ப கல்வி இயக்ககம் நடத்தி வருகிறது. இதுவரையில், ஒரு லட்சத்து 14 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். அதனடிப்படையில் ரேண்டம் எண்ணும் வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து, 17ம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மாணவர்கள் அவகாசம் கோரியதால், 25ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், நேற்றைய தினமும் வெளியாகவில்லை. இந்த நிலையில் என்ஜினீயரிங் படிப்புக்கான தரவரிசை பட்டியல் 28-ந் தேதி வெளியாக அதிகம் வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.