இங்., ராணி எலிசபெத்தின் கணவர் காலமானார் : அரசு மாளிகையில் உயிர் பிரிந்தது

9 April 2021, 5:07 pm
Britain_Royal_Philip - updatenews360
Quick Share

இங்கிலாந்து ராணி 2ம் எலிசபெத்தின் கணவர் பிலிப் தனது 99வது வயதில் காலமானார்.

இங்கிலாந்து இளவரசர் சார்லஸின் தந்தையான பிலிப் தனது வயது முதிர்ச்சி காரணமாக, கடந்த 2017ம் ஆண்டு பொது வாழ்க்கையில் இருந்து ஓய்வு பெற்றிருந்தார். இந்த நிலையில், கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வந்த அவர், வின்ஸ்டர் கேசில் அரசு மாளிகையிலேயே மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், சிகிச்சை பலனளிக்காமல், எலிசபெத்தின் கணவர் பிலிப் இன்று காலமானார். இங்கிலாந்து அரச குடும்ப வரலாற்றில் மிக அதிக காலம் இளவரசராக இருந்தவர் பிலிப் என்து குறிப்பிடத்தக்கது.

Views: - 72

0

0