மக்களைக் கவரும் புதிய திட்டங்கள்..! கிளைமாக்சில் சிக்ஸர் அடித்த எடப்பாடி பழனிச்சாமியும் மம்தா பானர்ஜியும்..!
26 February 2021, 8:05 pmஇந்திய தேர்தல் ஆணையம் இன்று தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம், அசாம் ஆகிய நான்கு மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கும் தேர்தல் தேதிகளை அறிவித்துள்ளது.
முன்னதாக இன்று மாலை 4/30 மணிக்கு தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகலாம் எனது தகவல் வெளியான உடனேயே, தமிழகம் மற்றும் மேற்கு வங்கத்தில் ஆளும் அரசுகள் முக்கியமான அறிவிப்புகளை அவசர அவசரமாக வெளியிட்டன.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடனேயே தேர்தல் நடத்தை விதிகள் அமலாவதால், அதற்கு பிறகு எந்தவித புதிய திட்டத்தையும் ஆளும் அரசுகள் அறிவிக்கக்கூடாது என்பதால், கிடைத்த வாய்ப்பைப் பாயன்படுத்தி, இரு மாநில அரசுகளும் புதிய அறிவிப்புகளை வெளியிட பயன்படுத்திக் கொண்டன.
தமிழக முதல்வர் அறிவித்தவை :
தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு, பாமக கேட்டு வந்த இட ஒதுக்கீடு கோரிக்கைக்கு செவிசாய்க்கும் விதமாக அரசு கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5 சதவிகித உள் இடஒதுக்கீடு வழங்குவதற்கான மசோதாவை தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நிறைவேற்றியுள்ளார்.
மேலும், தமிழக சட்டசபையின் 110’ன் கீழ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். இதில், கூட்டுறவு வங்கி, கூட்டுறவு சங்கங்களில் 6 சவரன் நகை வரை வைத்து விவசாயிகள் மற்றும் ஏழைகள் பெற்ற கடன்கள் தள்ளுபடி, கூட்டுறவு வங்கி, கூட்டுறவு சங்கங்களில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் பெற்ற கடன்கள் தள்ளுபடி ஆகிய அறிவிப்புகளும் அடங்கும்.
முன்னதாக, தமிழக விவசாயிகளின் கடன் சுமையை குறைக்கும் வண்ணம் ரூ.12,110 கோடி கூட்டுறவு பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்த நிலையில், தற்போது இந்த அறிவிப்பு விவசாயிகள் மற்றும் பெண்களிடையே அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது.
மேற்குவங்க முதல்வர் அறிவித்தவை :
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, “மேற்கு வங்க நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் தினசரி கூலி தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படும்” என்று அறிவித்தார்.
இந்த அறிவிப்பின் மூலம், மொத்தம் 56,500 தொழிலாளர்கள் வரை பயனடைவார்கள் என்று மம்தா பானர்ஜி ட்வீட் செய்துள்ளார்.
0
0