அறிவுசார் சமுதாயம் அமைய அனைவருக்கும் கல்வி அவசியம் : முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

18 September 2020, 1:18 pm
EPS- updatenews360
Quick Share

சென்னை : அறிவுசார் சமுதாயம் அமைய அனைவருக்கும் கல்வி கிடைப்பதை உறுதி செய்வதில் தமிழகம் முன்னோடியாக திகழ்வதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சத்யாபாமா கல்லூரியின் 29வது பட்டமளிப்பு விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொளி காட்சியின் மூலம் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது, மாணவர்கள், பேராசிரியர்களுக்கு மத்தியில் அவர் பேசியதாவது :- இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் உயர்கல்விச் சேர்க்கை அதிகம் நடைபெறுகிறது. குறைந்த செலவில் தரமான கல்வியை மாணவர்கள் பெறுவதற்கு தேவையான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.

இந்தியாவின் உயர்கல்வி கல்வி நிறுவனங்களின் தரவரிசைப் பட்டியலில் முதல் 100 இடங்களுக்குள் தமிழகத்தைச் சேர்ந்த 18 கல்லூரிகள் இருக்கின்றன. அறிவுசார் சமுதாயம் அமைய அனைவருக்கும் கல்வி கிடைப்பதை உறுதி செய்வதில் தமிழகம் முன்னோடியாக திகழ்கிறது.

ஏழை மாணவர்களும் உயர்கல்வியை கற்க தேவையான சூழலை அரசு உருவாக்கி வருகிறது. மேலும் 4 புதிய அரசு பொறியியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. கல்லூரிகளின் உட்கட்டமைப்புகளை மேம்படுத்த ரூ.80 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. வேலைவாய்ப்புகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன. நாட்டிலேயே உயர்கல்வி பயில்பவர்களை அதிகம் கொண்ட மாநிலமாக தமிழகம் விளங்குகிறது. உயர்கல்வியில் சேரும் மாணவர்களின் விகிதமும் 49 சதவீதமாக அதிகரித்துள்ளது. கொரோனா பொதுமுடக்கக் காலத்தில் தமிழகத்தில் தான் அதிகளவில் முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது, எனக் கூறினார்.

Views: - 10

0

0