அதிரடி காட்டும் பா.ஜ.க. : முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி அண்ணாமலை மாநில துணை தலைவராக நியமனம்..!

29 August 2020, 5:47 pm
Ex_IPS_Annamalai_UpdateNews360
Quick Share

சென்னை : அண்மையில் பா.ஜ.க.வில் இணைந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை மாநில துணை தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கர்நாடகாவில் நேர்மையான ஐபிஎஸ் அதிகாரி எனப் பெயரெடுத்த திருவண்ணாமலையைச் சேர்ந்த அண்ணாமலை, சில மாதங்களுக்கு முன்பு திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து, தற்சார்பு விவசாயம், ரஜினி ஆதரவு குறித்து பேசி வந்த நிலையில், டெல்லி சென்று பா.ஜ.க.வில் தன்னை இணைத்துக் கொண்டார்.

இவர் பா.ஜ.க.வில் இணைந்ததற்கு பல்வேறு தரப்பினர் வரவேற்பு தெரிவித்தாலும், திராவிட கழகத்தினர் இவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இப்படியிருக்க, தனக்கு பா.ஜ.க. பொறுப்பு கொடுத்தாலும், கொடுக்காவிடிலும், கட்சிக்காக பாடுபடுவேன் என அண்ணாமலை தெரிவித்திருந்தார். மேலும், குப்பைகளை என் மீது வீசினாலும், அந்த குப்பையில் இருந்து தாமரையை வளரச் செய்வேன் என சவாலும் விடுத்தார்.

இந்த நிலையில், தமிழக பா.ஜ.க.வின் துணைத் தலைவராக முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி அண்ணாமலை நியமிக்கப்படுவதாக அக்கட்சியின் மாநில தலைவர் எல்.முருகன் அறிவித்துள்ளார். இதையடுத்து, அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

Views: - 40

0

0