இது கோமாளித்தனம்.. ஒட்டகத்தில் வாக்குசேகரிப்பது தவறான செயல் : திமுகவினரை விமர்சித்த ஜெயக்குமார்!!

Author: Babu Lakshmanan
16 February 2023, 2:14 pm
Quick Share

ஈரோடு : ஈரோடு இடைத்தேர்தலில் திமுகவினர் ஒட்டகத்தில் சென்று வாக்கு சேகரிப்பது கோமாளித்தனத்தின் உச்சகட்டம் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைக்கு வரும் 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இதையொட்டி, அதிமுக, திமுக, நாம் தமிழர் கட்சி, தேமுதிக என 79 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். அனைத்து வேட்பாளர்களும் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பாக, ஆளும் திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் இவிகேஎஸ் இளங்கோவனும், அதிமுக வேட்பாளர் தென்னரசுவும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் ஒருபகுதியாக, திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் சந்திரன் ஒட்டகத்தில் சென்று நூதன முறையில் வாக்கு சேகரித்தார். இது வாக்காளர்களை வெகுவாக கவர்ந்தது. திமுக எம்எல்ஏவின் இந்த செயலை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுகவினர் விதிமீறல்களில் ஈடுபட்டு வருவதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார் கொடுத்தார்.

அதன்பிறகு, அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது :- ஈரோடு கிழக்கு தொகுதியில் ஒட்டகத்தில் சென்று ஓட்டுக்கேட்பது கோமாளித்தனத்தின் உச்சகட்டம். ஒட்டகத்தில் செல்வது சட்டப்படி தவறு. மளிகை பொருட்கள், இறைச்சி, பணத்தை ஆளுங்கட்சியினர் வீடு வீடாக விநியோகம் செய்கின்றனர்.

ADMK Jayakumar - Updatenews360

எது செய்தாலும், ஆளுங்கட்சி மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர். சேலத்தில் முதல்வரின் ஆய்வின் நோக்கம் என்ன..? ஈரோடு கிழக்கில் அதிமுக மகத்தான வெற்றி பெறும். சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது.

பணத்தை கொட்டி வெற்றி பெறாம் என பார்க்கின்றனர். அது முடியாது. வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசை மக்கள் அமைதியாக வேடிக்கை பார்க்கின்றனர். மவுன புரட்சி ஏற்படும். மவுன புரட்சி விடியா ஆட்சிக்கு பாடம் கற்று கொடுக்கும், என தெரிவித்தார்.

Views: - 316

0

1