ஃபேர் & லவ்லியில் ஃபேர் கிடையாதா..? ஹிந்துஸ்தான் யுனிலீவர் பகீர் அறிவிப்பு..!

25 June 2020, 6:37 pm
Fair&Lovely_UpdateNews360
Quick Share

இந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனம் தனது முதன்மை பிராண்ட் தோல் பராமரிப்பு கிரீமான ஃபேர் & லவ்லியில் இருந்து ‘ஃபேர்’ என்ற வார்த்தையை நீக்குவதாக அறிவித்துள்ளது. இன சமத்துவமின்மை மற்றும் அழகுத் தரங்கள் குறித்து உலகளாவிய விவாதம் நடைபெறுவதால் இந்த முடிவை எடுப்பதாக அறிவித்துள்ளது. இந்துஸ்தான் யூனிலீவர் பிராண்டில் “ஃபேர்” என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதை நிறுத்தப்போவதாகக் கூறிய நிறுவனம், மேலும் கிரீம் புதிய பெயர் ஒழுங்குமுறை ஒப்புதலுக்காகக் காத்திருக்கிறது என்றும் கூறியுள்ளது.

இந்தியாவில் விற்கப்படும் இரண்டு அழகுசாதன பொருட்களின் விற்பனையை நிறுத்துவதாக அமெரிக்க பன்னாட்டு ஜான்சன் மற்றும் ஜான்சன் நிறுவனம் அறிவித்ததை அடுத்து இந்த அறிவிப்பு வந்துள்ளது.

அனைத்து தோல் டோன்களையும் கொண்டாட இந்த பிராண்ட் உறுதிபூண்டுள்ளது என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. ஹிந்துஸ்தான் யுனிலீவரின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான சஞ்சீவ் மேத்தா கூறுகையில், “நாங்கள் எங்கள் தோல் பராமரிப்புத் துறையை மேலும் மேம்பட்டதாக ஆக்குகிறோம். 2019 ஆம் ஆண்டில், ஃபேர் அண்ட் லவ்லி பேக்கேஜிங்கிலிருந்து இரண்டு முகங்களையும், நிழல் வழிகாட்டிகளையும் கொண்ட கேமியோவை அகற்றினோம்.

இது ஆரோக்கியமான சருமத்தின் முழுமையான மற்றும் அனைத்தையும் உள்ளடக்கிய நடவடிக்கையாகும். இந்த மாற்றங்கள் எங்கள் நுகர்வோரால் நல்ல வரவேற்பைப் பெற்றன. எங்கள் பிராண்ட் பெயரான ஃபேர் & லவ்லி என்பதிலிருந்து ‘ஃபேர்’ என்ற வார்த்தையை அகற்றுவோம் என்று இப்போது அறிவிக்கிறோம். புதிய பெயர் ஒழுங்குமுறை ஒப்புதலுக்காகக் காத்திருக்கிறது. மேலும் திருத்தப்பட்ட பெயருடன் கூடிய பேக் அடுத்த சில மாதங்களில் சந்தையில் கிடைக்கும்.” என கூறினார்.

ஃபேர் அண்ட் லவ்லி என்பது ஹிந்துஸ்தான் யுனிலீவரின் முதன்மை தோல் பராமரிப்பு பொருளாகும். மேலும் இது ஆண்டு விற்பனையில் 560 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான வருமானத்தை ஈட்டுகிறது. இது இந்தியாவில் 50-70% பங்கைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply