இதுக்கு எதுக்கு டா வெள்ளையும் சொள்ளையும்? வெளிச்சத்திற்கு வந்த மக்கள் பிரதிநிதியின் போலிப் போராட்டம்!!

Author: Udayachandran RadhaKrishnan
27 October 2021, 1:02 pm
Tasmac MLA -Updatenews360
Quick Share

தமிழகத்தில் ஏழைகளை காக்கும் டெக்ஸ்டைல் சிட்டி என்றழைக்கப்படும் மாவட்டத்தில் ஏராளமான பின்னலாடை நிறுவனங்கள் உள்ளன. உள்ளூர் மட்டுமல்லாமல் வெளியூர், வெளிமாநில தொழிலாளர்கள் ஏராளமானோருக்கு இந்த மாவட்டம் ஒரு வரப்பிரசாதம்.

வாரமானால் பின்னலாடை நிறுவனத்தில் பணிபுரிபவர்களுக்கு ஊதியம் வழங்குவது வழக்கம். வாரத்தின் இறுதி நாட்களில் இளைப்பாற டாஸ்மாக் கடைக்கு வரும் தொழிலாளர்கள் ஏராளமானோர் உண்டு.

அவர்களுக்கு ஏற்ற வகையில் அம்மாவட்டம் முழுவதும் ஏராளமான டாஸ்மாக் கடைகளும் உண்டு. அதற்கு பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் எதிர்பபதும் உண்டு. அப்படித்தான் கொங்கணகிரி கோயில் அருகில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது.

இந்தப் பகுதியில் கோயில், தனியார் பள்ளி, கல்லூரிகள் அதிக அளவில் உள்ளது. ஆகவே, இந்த சாலையில் செல்லும் மாணவியர்களுக்கும், வேலைக்குச்செல்லும் பெண்களுக்கு இடையூறு ஏற்பட்டு வருவதாகக்கூறப்படுகிறது.

இதையடுத்து, கோயில் அருகில் உள்ள டாஸ்மாக் கடையை மூடக்கோரி அப்பகுதி பொதுமக்கள், பல்வேறு அமைப்பினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இதைத்தொடர்ந்து, டாஸ்மாக் கடையை கடந்த 8ஆம் அகற்றுவதாக டாஸ்மாக் அதிகாரிகள் உறுதியளித்திருந்தனர்.
இந்த நிலையில், டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய பொதுமக்களுடன் வெள்ளையும் சொள்ளையுமாக வந்த மக்கள் பிரதிநிதி ஒருவர், மக்களுடன் மக்களாக நின்று போராட்டத்தில் ஈடுபட்டார்.

அடடே மக்களுக்காக குரல் கொடுக்கும் மக்கள் பிரதிநிதியா என போராட்டத்தில் ஈடுபட்ட மக்களும் ஆச்சரியத்தில் பிரதிநிதியை வரவேற்றனர். மேலும் அந்த கடைக்கு மதுபானங்கள் இறக்க வந்த சரக்கு வாகனத்தை சிறைபிடித்து தர்ணாவில் ஈடுபட்ட பொதுமக்களுடன் மக்கள் பிரதிநிதியும் பங்கேற்றார்.

மேலும் டாஸ்மாக் கடை முன்பு நாற்காலியை போட்டு அமர்ந்தே விட்டார். மக்கள் முன்னால் பவுசு காட்டிய எம்எல்ஏவின் செயல் பின்பு தான் தெரிந்தது. விசாரித்ததில், சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடையில் பிரமுகர் பார் நடத்தி வருவது மட்டுமல்லாமல், அதே மாநகரில் மூன்று பார்களை நடத்தி வருகிறார்.

நான்கு பார்களில் மாத மாதம் கொடுக்க வேண்டிய கட்டிங்கை மக்கள் பிரதிநிதியின் தரப்பினருக்கு அந்த பிரமுகர் கொடுக்க மறுத்துள்ளார். இதனால்தான் மக்களோடு மக்களாக நின்று அந்த டாஸ்மாக் கடைக்கு எதிர்பை தெரிவித்திருக்கிறார்.

இதனால் பயந்து போன பிரமுகர், மற்ற மூன்று பார்களை காப்பாற்றி ஆகணுமே என்று உடனே கட்டிங்கை வெட்டியுள்ளார். இனி பார்பக்கம் மக்கள் பிரதிநிதியின் பார்வை திரும்பி விடுமோ என்ற அச்சத்தில் பார்கள் நடத்தி வருபவர்கள் அச்சத்தில் உள்ளனர்களாம்.

Views: - 190

0

0