பிரபல சின்னத்திரை நடிகை தற்கொலை: விபரீத முடிவுக்கு காரணம் என்ன?….சிக்கியது 4 பக்க கடிதம்..!!

Author: Aarthi Sivakumar
30 September 2021, 3:35 pm
Quick Share

மனஅழுத்தம் காரணமாக பிரபல சின்னத்திரை நடிகை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தொற்று பரவல் குறைந்ததையடுத்து ஊரடங்கில் தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு வருகிறது.

கொரோனா வைரஸின் தாக்கம் மக்களை ஒருபுறம் அச்சுறுத்திக்கொண்டிருக்கும், அதே நேரத்தில் அடுத்தடுத்து வெளியாகும் பிரபலங்களின் மரண செய்தி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

முக்கியமாக, தமிழ் சினிமாவில் இயக்குநர் எஸ்பி.ஜனநாதன் மார்ச் 14ம் தேதி மூளையில் ரத்த கசிவு ஏற்பட்டு உயிரிழந்தார். சின்னக்கலைவாணர் என ரசிகர்களால் கொண்டாடப்பட்ட 59 வயதான நடிகர் விவேக்கின் மறைவு திரைத்துறையினரை மட்டுமின்றி பொதுமக்களிடையேயும் கலக்கத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியது. மேலும், எழுத்தாளர் தாமிரா, இயக்குநர் கே.வி.ஆனந்த், நகைச்சுவை நடிகர் நெல்லை சிவா, பாடும் நிலா SPB உள்ளிட்ட முக்கிய பிரபலங்களின் மரணம் மக்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியது.

சின்னத்திரை பிரபலங்கள் பலர் தற்கொலை செய்து கொண்ட நிகழ்வுகளும் அடுத்தடுத்து நிகழ்கிறது. சீரியல் நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்ட விவகாரம் சென்னை முதல் பட்டிதொட்டியெங்கும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 2006ஆம் ஆண்டு சன் டிவி புகழ் வைஷ்ணவி வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். மேலும், ஷோபனா, சபர்ணா, சாய் பிரசாந்த் உள்ளிட்ட பலர் தற்கொலை செய்து கொண்டனர்.

இந்நிலையில், பிரபல கன்னட தொலைக்காட்சி சீரியல் நடிகை சௌஜன்யா பெங்களூருவில் உள்ள தனது வீட்டில் மின்விசிறியில் தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் மனஅழுத்தம் காரணமாக தற்கொலை செய்துகொள்வதாக 4 பக்கங்கள் கொண்ட கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

நான் இந்த முடிவெடுக்க காரணம் என்னுடைய மனஅழுத்தம் மட்டுமே. என்னுடைய பெற்றோர்கள் என்னை மன்னிக்கவேண்டும் .என்று அந்த கடிதத்தில் எழுதியிருந்தார் . சௌஜன்யா சில கன்னட தொலைக்காட்சி சீரியல்களிலும், இரண்டு கன்னட படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .

To be or not to be…”: On Suicide and its causes | Deccan Herald

மனஅழுத்தம் காரணமாக சௌஜன்ய தற்கொலை செய்து கொண்டது சினிமாத்துறையினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . இதை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், பிரேத பரிசோதனைக்காக உடல் ராஜராஜேஸ்வரி மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

soujanya kannada actress, soujanya kannada actress death, soujanya kannada actress suicide, soujanya kannada actress serial, soujanya kannada actress movie list, soujanya kannada actress, soujanya kannada actress instagram, soujanya death, soujanya death news, kannada actress soujanya, சீரியல் நடிகை மரணம், சீரியல் நடிகை தற்கொலை, சீரியல் நடிகை செளஜன்யா, கன்னட சீரியல் நடிகை செளஜன்யா, கன்னட சீரியல் நடிகை செளஜன்யா தற்கொலை, சீரியல் செய்திகள், தமிழ் சீரியல் செய்திகள்

தொடரும் சினிமா மற்றும் சின்னத்திரை பிரபலங்களின் தற்கொலை சம்பவங்கள் ரசிகர்களிடையே மற்றுமின்றி திரையுலகினரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

Views: - 512

1

0