மீண்டும் எஸ்.பி.பி.யின் உடல்நிலை கவலைக்கிடம் : மருத்துவமனை நிர்வாகம் அதிர்ச்சி தகவல்..!

17 August 2020, 7:09 pm
spb - updatenews360
Quick Share

சென்னை : கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை மீண்டும் கவலைக்கிடமாகியுள்ளதாக மருத்துவமனை தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸிற்கு பாமர மக்கள் முதல் பிரபலங்கள் வரையில் அனைத்து தரப்பு மக்களுக்கு பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனாவிற்கு அகப்பட்டு வரும் திரையுலக நட்சத்திரங்களின் வரிசையில் பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியமும் இணைந்தார்.

இவர் கடந்த 5ம் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்டு, எம்.ஜி.எம். மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்தார். இதையடுத்து, சிகிச்சைக்கு பிறகு எஸ்.பி.பி.யின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

எஸ்.பி.பி. விரைவில் குணமடைந்து வர வேண்டும், ரஜினி, இளையராஜா உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர். இதனிடையே, அவரது மகனும், பாடகருமான எஸ்.பி. சரணும் தந்தையின் உடல்நிலை குறித்த நிலவரத்தை வெளியிட்டு வந்தார்.

இந்த நிலையில், பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை மீண்டும் கவலைக்கிடமாக உள்ளதாக எம்.ஜி.எம். மருத்துவமனை தெரிவித்துள்ளது. மேலும், தீவிர சிகிச்சை பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவரது உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.