பிரபல பாடகர் எஸ்.பி.பி.யின் உடல்நிலைக் கவலைக்கிடம் : அவசர சிகிச்சை பிரிவிற்கு மாற்றம்..!
14 August 2020, 5:14 pmசென்னை : கொரோனாவால் பாதிக்கப்பட்ட பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் உடல்நிலைக் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸிற்கு பாமர மக்கள் முதல் பிரபலங்கள் வரையில் அனைத்து தரப்பு மக்களுக்கு பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனாவிற்கு அகப்பட்டு வரும் திரையுலக நட்சத்திரங்களின் வரிசையில் பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியமும் இணைந்தார்.
இவர் கடந்த 5ம் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்டு, எம்.ஜி.எம். மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று நள்ளிரவில் எஸ்.பி.பி.க்கு திடீரென உடல்நிலை மோசமடைந்துள்ளது. அவரை பரிசோதித்த மருத்துவர்கள் உடனடியாக, அவசர சிகிச்சை பிரிவிற்கு மாற்றம் செய்துள்ளனர்.
தற்போது, எஸ்.பி.பி. உயிருக்கு ஆபத்தான கட்டத்தில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவரது உடல்நிலையை மருத்துவக் குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருவதாக எம்.ஜி.எம். மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.