மத்திய அரசின் விவசாய சட்டங்களில் தமிழக விவசாயிகளுக்கு பாதிப்பில்லை : முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி..!

19 September 2020, 8:14 pm
Quick Share

சென்னை : மத்திய அரசின் விவசாய சட்டங்களில் தமிழக விவசாயிகளுக்கு பாதிப்பில்லை என்றும், விவசாய பெருமக்கள் எதிர்பாராத விலை வீழ்ச்சியால் பாதிக்கப்படுவது தவிர்க்கப்படும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- மத்திய அரசு கொண்டு வந்துள்ள அத்தியாவசியப்‌ பொருட்கள்‌ திருத்தச்‌ சட்டம்‌, வேளாண்‌ உற்பத்தி ஊக்குவிப்புச்‌ சட்டம்‌ மற்றும்‌ வேளாண்‌ சேவைகள்‌ திருத்தச்‌ சட்டம்‌ ஆகிய மூன்று சட்டங்களை, தமிழ்நாடு அரசு ஆதரித்துள்ளது என்றும்‌, இவை விவசாயிகளின்‌ முதுகெலும்பை ஒடிக்கும்‌ சட்டங்கள்‌ என்றும்‌, இவை விவசாயிகளின்‌ நலனுக்கு எதிரானது என்றும்‌, இச்சட்டங்கள்‌ கார்ப்பரேட்‌ நிறுவனங்கள்‌ பதுக்கி வைத்துக்‌ கொள்ள வழிவகுக்கும்‌ என்றும்‌, எதிர்க்கட்சித்‌ தலைவர்‌ மு.க.ஸ்டாலின்‌ அவர்கள்‌ கடந்த 18ம் தேதி அன்று ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்‌.

அந்த அறிக்கையில்‌, இச்சட்டங்கள்‌ வேளாண்‌ விற்பனைக்‌ கூடங்களுக்கும்‌, உழவர்‌ சந்தை திட்டத்திற்கும்‌ எதிரானது என்றும்‌, விவசாயிகளின்‌ குறைந்தபட்ச ஆதார விலைக்கு எவ்வித உத்தரவாதமும்‌ இதில்‌ இல்லையென்றும்‌ குற்றம்‌ சாட்டியுள்ளார்‌.

மத்திய அரசால்‌,

அ) விலை உறுதியளிப்பு மற்றும்‌ பண்ணை ஒப்பந்தத்திற்கான விவசாயிகள்‌ (அதிகாரம்‌ மற்றும்‌
பாதுகாப்பு) அவசரச்சட்டம்‌, 2020.

ஆ) விவசாயிகள் விளைபொருட்கள் வாணிகம் மற்றும் வர்த்தகம் (ஊக்குவித்தல் மற்றும் உதவுதல்) அவசரச்சட்டம்

இ) அத்தியவசியப்‌ பொருட்கள்‌ அவசர திருத்தச்‌ சட்டம்‌, 2020.

ஆகிய சட்டங்கள்‌ 5.6.2020 அன்று அவசர சட்டங்களாக பிறப்பிக்கப்பட்டு, பின்பு இச்சட்டங்கள்‌ மக்களவையில்‌ முன்மொழியப்பட்டு, கடந்த 15.9.2020 மற்றும்‌ 17.9.2020 ஆகிய தேதிகளில்‌ இச்சட்டங்கள்‌ ஆய்வு செய்யப்பட்டு, ஒப்புதல்‌ அளிக்கப்பட்டுள்ளது.

(அ) தமிழ்நாட்டில்‌ கோகோ, கரும்பு சாகுபடி, கோழிப்பண்ணை போன்றவற்றில்‌ ஒப்பந்த முறை ஏற்கனவே நடைபெற்று வரும்‌ நிலையில்‌, இதுபோன்ற முறைகளை ஒழுங்குபடுத்த தற்போது கொண்டு வரப்பட்ட விலை உறுதியளிப்பு மற்றும்‌ பண்ணை ஒப்பந்தத்திற்கான விவசாயிகள்‌ (அதிகாரம்‌ மற்றும்‌ பாதுகாப்பு ) சட்டம்‌, 2020 ஒப்பந்த சாகுபடி முறையை ஒழுங்குபடுத்த உதவும்‌. மேலும்‌, இச்சட்டம்‌, கடந்த 2019ஆம்‌ ஆண்டு, விவசாயிகளின்‌ நலன்‌ கருதியும்‌, அவர்களின்‌ வருமானத்தை பெரிய அளவில்‌ பெருக்கவும்‌, மாண்புமிகு அம்மாவின்‌ அரசால்‌ கொண்டு வந்த தமிழ்நாடு வேளாண்மை விளைபொருட்கள்‌ மற்றும்‌ கால்நடை ஒப்பந்த பண்ணை மற்றும்‌ சேவைகள்‌ (ஊக்குவித்தல்‌ மற்றும்‌ உதவுதல்‌) சட்டத்தின்‌ நோக்கங்களையும்‌ உறுதிப்படுத்தும்‌.

ஒப்பந்த சாகுபடியை ஊக்குவிக்கும்‌ வகையில்‌ அமைந்துள்ள இச்சட்டத்தில்‌, விவசாயிகளைக்‌ கட்டாயப்படுத்தவோ, அல்லது பாதிக்கும்‌ வகையிலோ உள்ள ஷரத்துக்கள்‌ எதுவும்‌ இல்லை. வேளாண்‌ வணிக நிறுவனங்கள்‌, மொத்த விற்பனையாளர்கள்‌, ஏற்றுமதியாளர்கள்‌, உணவு பதப்படுத்துதல்‌ நிறுவனங்கள்‌ ஆகியவற்றுடன்‌ பண்ணை சேவைகள்‌ மற்றும்‌ விளைபொருட்கள்‌ கொள்முதலுக்காக விவசாயிகள்‌ ஒப்பந்தம்‌ செய்து கொள்ளலாம்‌.

இதன்மூலம்‌, விவசாயிகளுக்கு விலை வீழ்ச்சி ஏற்படாமல்‌, ஒப்பந்த விலை மூலம்‌ உறுதியான வருவாய்‌ கிடைக்கும்‌. ஒருவேளை ஒப்பந்த விலையை விட, சந்தை விலை அதிகரித்து விட்டால்‌, அந்தக்‌ கூடுதல்‌ தொகையில்‌ விவசாயிகளுக்குப்‌ பயன்‌ கிடைக்கவும்‌ இந்த சட்டத்தில்‌ இடம்‌ உள்ளது. அரசியல்‌ காரணங்களுக்காக தற்போது இந்த ஒப்பந்தச்‌ சட்டத்தினை எதிர்க்கும்‌ மாண்புமிகு எதிர்க்கட்சித்‌ தலைவர்‌ அவர்கள்‌, முன்னர்‌ மாண்புமிகு அம்மாவின்‌ அரசு இது போன்ற சட்டத்தினை தமிழ்நாட்டில்‌ அமல்படுத்திய போது எதிர்க்கவில்லை என்பதையும்‌ தெளிவுபடுத்த
கொள்முதல்‌ செய்யும்‌ நபர்‌ ஆகிய இருவருக்கிடையே ஒருமித்த கருத்தும்‌, வெளிப்படையான, கிடைக்கும்‌ என்ற நிலை இருப்பதால்‌, விவசாயிகள்‌, விலைவீழ்ச்சி போன்ற பாதிப்புகளிலிருந்து காப்பாற்றப்படுவதோடு, கொள்‌ முதலாளர்களும்‌ குறிப்பிட்ட தரம்‌ மற்றும்‌ அளவிலான வேளாண் விளைபொருட்களை பெறுவது உறுதி செய்யப்படுகிறது.

இதன்மூலம்‌, விவசாயிகள்‌ மற்றும்‌ கொள்முதல்‌ செய்வோர்‌ இருவர்‌ நலதும்‌ பாதுகாக்கப்படும்‌. விவசாயிகள்‌ அவர்களுக்குரிய பயன்களை உறுதியாகப்‌ பெறுவதோடு, உணவு பதப்படுத்துதலுக்குத்‌ தேவையான தரமான விவசாய பொருட்கள்‌ கிடைப்பது‌ உறுதி செய்து, இதுபோன்ற தொழில்‌களும்‌ கிராமப்பகுதிகளில்‌ பெருகி வேலைவாய்ப்பு ஏற்படும்.

ஆ) விவசாயிகள்‌ விளைபொருட்கள்‌ வணிகம்‌ மற்றும்‌ வர்த்தகம்‌ (ஊக்குவித்தல்‌ மற்றும் உதவுவதல்) சட்டம் 2020-ன் வகைமுறைகளை ஆராயும் போது, இவை வேளாண் விளைபொருட்கள் வணிக பகுதி என அறிவிக்கை செய்யப்பட்ட எந்த இடத்தில்‌ வேண்டுமானாலும், விற்பனை செய்ய அனுமதிக்கப்படுவதால், விவசாயிகள்‌ முறையான போட்டி உள்ள தனியார்‌ மற்றும்‌ அரசு சார்ந்த வேளாண்‌ விற்பனை மைய கட்டமைப்புகளையும்‌ மேப்படுத்த
வாய்ப்புகள்‌ ஏற்படும்‌. தமிழ்நாட்டில்‌, ஏற்கனவே நடைமுறையில்‌ உள்ள ”தமிழ்தாடு வேளாண்‌ விளைபொருட்கள்‌ சந்தைப்படுத்துதல்‌ (ஒழுங்குபடுத்துதல்‌) இரண்டாம்‌ திருத்தச்‌ சட்டத்தின்படி!”தமிழ்நாட்டில்‌ ஒழுங்குமுறை விற்பனைக்‌ கூடங்களில்‌ இடைத்தரகர்கள்‌ என்ற நிலை இல்லை.

வேளாண்‌ விற்பனை வளாகம்‌ மற்றும்‌ அதற்கு வெளியில்‌ அறிவிக்கை செய்யப்பட்ட பகுதிகளில்‌ விற்பனை செய்யும்போது, சந்தைக்‌ கட்டணம்‌ ஒரு சதவீதம்‌ மட்டுமே பொருட்களை வாங்கும்‌ வணிகர்களிடமிருந்து வசூலிக்கப்படுகிறது. இது விற்பனை மைய கட்டமைப்பை மேம்படுத்த பயன்படுத்தப்படுகிறது. ஆனால்‌, பஞ்சாப்‌ மாநிலத்தில்‌, முக்கிய விளைபொருட்களான நெல்‌, கோதுமைக்கு சந்தைக்‌ கட்டணம்‌ மூன்று சதவீதத்துடன்‌ மூன்று சதவீதம்‌ உள்ளாட்சி மேம்பாட்டு மேல்‌ வரியாக வசூலிக்கப்பட்டு, அந்தமேல்வரி அரசு கணக்கில்‌ சேர்க்கப்படுகிறது.

இது தவிர, 2.5 சதவீதம்‌ இடைத்தாகர்களுக்கான கட்டணம்‌ வசூலிக்கப்படுகிறது. இவை அனைத்தும்‌, பொருட்களை வாங்கும்‌ வணிகர்களிடமிருந்து வசூலிக்கப்படுகிறது. இந்த புதிய சட்டப்படி, சந்தை வளாகம்‌ தவிர அறிவிக்கை செய்யப்பட்ட வணிக பகுதிகளில்‌ இத்தகைய கட்டணம்‌ வசூலிக்க இயலாது என்பதால்‌, பஞ்சாப்‌ மாநில அரசிற்கு பெரிய அளவு வருவாயில்‌ இழப்பு ஏற்படும்‌. அதே சமயம்‌, இந்த கட்டாய சந்தைமுறையினை நீக்கி, விவசாயிகளுக்கு விளைபொருள்‌ எங்கு வேண்டுமானாலும்‌ விற்பனை செய்து கொள்ள முழு சுதந்திரத்தை வழங்குவதே இச்சட்டத்தின்‌ முக்கிய நோக்கமாகும்‌.

மேலும்‌, விவசாயிகள்‌ தங்கள்‌ விருப்பம்‌ போல்‌ எவ்வித தடையும்‌ இன்றி, ஒழுங்குமுறை விற்பனைக்‌ கூடங்களுக்கு வெளியிலும்‌ தங்களது விளைபொருட்களை விற்பனை செய்திடலாம்‌. குறிப்பாக, இதற்கென விவசாயிகளோ, வணிகர்களோ எந்தவித கட்டணமும்‌ செலுத்தத்‌ தேவையில்லை. அதோடு மட்டுமல்லாமல்‌, மாநிலத்திற்கு உட்பட்ட பிறபகுதிகளிலும்‌. மாநிலத்திற்கு வெளியிலும்‌, ஒளிவு மறைவற்ற முறையில்‌ வேளாண்‌ விளைபொருட்களை வணிகம்‌
மற்றும்‌ வர்த்தகம்‌ செய்வதற்கு ஏற்ற சூழ்நிலையினை இச்சட்டம்‌ உருவாக்கும்‌.

இது தவிர, மின்னணு வர்த்தக முறைகள்‌ மூலம்‌ விளைபொருட்களை இந்தியாவின்‌ எந்தப்‌ பகுதியில்‌ உள்ள வணிகர்களுக்கும்‌ நல்ல விலைக்கு விற்பனை செய்வதற்கு இச்சட்டத்தில்‌ வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதன்‌ மூலம்‌ விவசாயிகள்‌ தங்களது விளைபொருட்களுக்கு போட்டி முறையில்‌ நல்ல விலையைப்‌ பெறுவது உறுதி செய்யப்படும்‌.

இச்சட்டத்தில்‌ “வணிகப்‌ பகுதி’ என்ற புதிய அணுகுமுறை கொண்டு வரப்பட்டுள்ளது. இப்பகுதியில்‌ வியாபாரம்‌ செய்பவர்களிடமிருந்து எவ்வித கட்டணமும்‌ இச்சட்டத்தின்படி வசூலிக்கப்படமாட்டாது. விளைபொருட்களை கொள்முதல்‌ செய்யும்‌ வணிகர்களிடம்‌ நிரந்தர கணக்கு எண்‌ (044 பாம்‌) மீட்டும்‌ இருந்தால்‌ போதுமானதாகும்‌. மாண்புமிகு எதிர்க்கட்சித்‌ தலைவர்‌ சொல்வது போல்‌ விவசாயிகளுக்கு நிரந்தர கணக்கு எண்‌ தேவையில்லை. இச்சட்டம்‌ எல்விதந்திலும்‌ ஒழுங்குமுறை விற்பனைக்‌ மேலும்‌, தற்போது குறைந்தபட்ச ஆதாரவிலையில்‌ நடைபெறும்‌ கொள்முதலும்‌ பாதிக்காது.

இ) அத்தியவாசியப்‌ பொருட்கள்‌ திருத்தச்‌ சட்டம்‌, 2020ல்‌, தானியங்கள்‌, பருப்பு வகைகள்‌, உருளைக்கிழங்கு, வெங்காயம்‌, சமையல்‌ எண்ணெய்‌ வித்துக்கள்‌ மற்றும்‌ எண்ணெய்‌ ஆகியவை போர்‌, பஞ்சம்‌, அசாதாரணமான விலை உயர்வு மற்றும்‌ இயற்கை பேரிடர்‌ போன்ற சூழ்நிலைகளில்‌, கட்டுப்பாடுகளை விதிக்க அரசால்‌ அரசிதழில்‌ அறிவிக்கை செய்து, முறைப்படுத்த வழிவகை செய்யப்படுகிறது.

100 சதவீதத்திற்கு மிகும்போதும்‌, வேளாண்‌ விளைபொருட்களின்‌ விலையேற்றம்‌ 50 சதவீதத்திற்கு மிகும்போதும்‌, அவற்றின்‌ இருப்பு அனவினை நெறிமுறைப்படுத்த இச்சட்டத்தில்‌ வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஆகவே, தேவையில்லாமல்‌ இருப்பு அளவுக்கான கட்டுப்பாடுகள்‌ விதிக்கப்படுவதில்லை. விவசாயிகள்‌ மட்டுமன்றி நுகர்வோரும் பயனடைவர். இதனால், கார்ப்பரேட் நிறுவனங்கள், அத்தியாவசியப்‌ பொருட்‌கள்
பதுக்குவதற்கு வழிவகுக்கும்‌ என்ற கூற்றில்‌ துளியும்‌ உண்மையில்லை.

மேலும்‌, உணவு பதப்படுத்துதல்‌ மற்றும்‌ விநியோகத்‌ தொடர்‌ மேலாண்மை உறுதியாக்கப்பட்டு, விவசாயிகளும்‌, உணவு பதப்படுத்தும்‌ தொழிலில்‌ ஈடுபட்டுள்ளோரும்‌ ஒருங்கே பயன்பெற இச்சட்டத்தில்‌ வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த சட்டம்‌ விவசாயிகளுக்கு அதிக வாய்ப்புகள்‌ கிடைப்பதையும்‌, சந்தை செலவுகளைக்‌ குறைத்து, இலாபகரமான விலை கிடைப்பதையும்‌, சந்தைக்கு வெளியே கூடுதல்‌ வாய்ப்புகளை உருவாக்குவதையும்‌ உறுதி செய்யும்‌, எனத் தெரிவித்துள்ளார்.

Views: - 1

0

0