விவசாயிகளை திருடர்களை போல நடத்துவதா..? நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு விவசாயிகள் கண்டனம்..!!

Author: Babu Lakshmanan
23 July 2021, 5:44 pm
farmers - updatenews360
Quick Share

தேனி : விவசாயிகளை திருடர்கள் என்பது போல அதிகாரிகளுக்கு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் உத்தரவிட்டிருப்பதற்கு விவசாயிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தேனி மாவட்டம் முல்லை பெரியாறு பகுதி பட்டா நிலங்களில் கிணறு அமைத்து பம்புசெட் மூலம் விவசாய நிலங்களுக்கு தண்ணீரை எடுத்து பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், விவசாயிகள் முல்லைப் பெரியாற்றில் தண்ணீர் திருடுவதாகக் கூறி, நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் உத்தரவின் பேரில், மின் இணைப்பை அதிகாரிகள் துண்டித்து விட்டதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

இந்த நிலையில், நேற்று தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமியை கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் சந்தித்தனர். அப்போது, உணவு உற்பத்தி செய்து கொடுக்கும் விவசாயிகளான எங்களுக்கு நிதியமைச்சர் திருடர்கள் பட்டம் கொடுத்ததாகவும், தண்ணீரை எடுத்து விவசாயிகள் விவசாயத்திற்குதான் பயன்படுத்துவதாகக் கூறி முறையிட்டனர்.

மேலும், விவசாயிகளை கொச்சைப்படுத்துவதும், அவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் விதமாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் எடுக்கும் நடவடிக்கைகளை முதலமைச்சர் ஸ்டாலின் தடுத்து நிறுத்த வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதனைக் கேட்ட அமைச்சர் பெரியசாமி, “இப்பிரச்னையில் விவசாயிகள் பாதிக்கப்படாமல் பார்த்து கொள்ளப்படும்,” என்றார்.

Views: - 285

0

0