மெரினாவில் முப்படையினர் ஒத்திகை: குடியரசு தின விழாவுக்கான இறுதிக்கட்ட ஒத்திகை..!!

24 January 2021, 10:15 am
muppadai - updatenews360
Quick Share

சென்னை: குடியரசு தின விழாவுக்கான இறுதிகட்ட ஒத்திகை மெரினாவில் நடைபெற்றது.

குடியரசு தினவிழா வரும் 26ம் தேதி நடைபெற உள்ளது. அன்றைய தினம் சென்னை மெரினா காமராஜர் சாலையில் உள்ள காந்தி சிலை அருகே தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தேசிய கொடியை ஏற்ற உள்ளார்.

இதை முன்னிட்டு ஜனவரி 20, 22, 24 ஆகிய தேதிகளில் மெரினாவில் அணிவகுப்பு ஒத்திகை நடத்த திட்டமிடப்பட்டது. இந்நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்னர் மெரினா கடற்கரையில் உள்ள காந்தி சிலை அருகே முதல் நாள் அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றது.

இந்த ஒத்திகையில் ஆளுநர், முதலமைச்சர் வருவதுபோலவும், அவர்களுக்கு மரியாதை செய்வது போலவும் ஒத்திகை நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, முப்படையினர் அணிவகுப்பு நடத்தினர். தேசிய மாணவர் படை, மத்திய தொழிலகப் படை, ஆர்.பி.எப்., தமிழக காவல்துறை, தீயணைப்பு படை ஆகியோர் அடுத்தடுத்து அணிவகுத்தனர். மேலும், காவல்துறையின் மோட்டார் சைக்கிள் ஒத்திகை நடைபெற்றது.

இந்நிலையில் குடியரசு தின விழாவுக்கான இறுதிக்கட்ட ஒத்திகை சென்னை மெரினா காமராஜர் சாலையில் இன்று நடைபெற்றது. இந்த ஒத்திகையில் கடற்படை, விமானப்படை, ராணுவப்படை ஆகிய முப்படைகளின் மிடுக்கான அணிவகுப்பு நடைபெற்றது. அதனை தொடர்ந்து தமிழக காவல்துறையினரும் அணிவகுப்பு நடத்தினர். மேலும் பல்வேறு துறையினரின் அலங்கார வாகனங்களும் அணிவகுப்பில் பங்கேற்றன.

Views: - 0

0

0