இறுதி செமஸ்டர் தேர்வு முடிவுகள் இன்று மாலை 6 மணிக்கு வெளியீடு : சென்னை பல்கலைக்கழகம்..!!

14 October 2020, 4:39 pm
Chennai university 1- updatenews360
Quick Share

சென்னை : இறுதி செமஸ்டர் தேர்வு முடிவுகள் இன்று மாலை 6 மணிக்கு வெளியிடுப்படும் என சென்னை பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

கொரோனா பொது முடக்கம் காரணமாக பள்ளி கல்லூரிகள் திறக்கப்படவில்லை. இந்த நிலையில் இறுதியாண்டு படிக்கும் மாணவர்களுக்கு இறுதி செமஸ்டர் தேர்வுகள் தவிர அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்திருந்தது.

அதன்படி, சென்னை பல்கலைக்கழகம் மற்றும் அதனுடன் இணைந்த இணைப்பு கல்லூரிகளில் இறுதியாண்டு படிக்கும் மாணவர்களுக்கான இறுதி செமஸ்டர் தேர்வு கடந்த மாதம் 21 ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை நடைபெற்றது.

இந்த நிலையில், இறுதி செமஸ்டர் தேர்வு முடிவுகள் இன்று மாலை 6 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும் என சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. மாணவர்கள் www.results.unom.ac.in என்ற இணையதளத்தில் தங்களின் மதிப்பெண் விபரங்களை தெரிந்து கொள்ளலாம்.

Views: - 144

0

0