#Corona பச்சையில் இருந்து ஆரஞ்சு…! தலைகீழான கிருஷ்ணகிரி…!

2 May 2020, 10:44 am
Corona_Test_UpdateNews360
Quick Share

கிருஷ்ணகிரி: பச்சை மண்டலமாக இருந்த கிருஷ்ணகிரியில் முதல் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் 12 மாவட்டங்கள் சிவப்பு மண்டலமாகவும், 24 மாவட்டங்கள் ஆரஞ்சு மண்டலமாகவும் வகைப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் ஒரே ஒரு மாவட்டமான கிருஷ்ணகிரி மட்டும் பச்சை மண்டலமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. 

இந் நிலையில், கிருஷ்ணகிரியில் 67 வயது முதியவர் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. ஆந்திராவில் பணியாற்றி திரும்பி வந்த அவருக்கு தொற்று உறுதியாகி இருக்கிறது.  அதனை மாவட்ட நிர்வாகம் உறுதிப்படுத்தி உள்ளது.

அதனால் பச்சை மண்டலம் என அறிவிக்கப்பட்டு இருந்த கிருஷ்ணகிரியில் முதல் கொரோனா பாதிப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆகையால் அது ஆரஞ்சு மண்டலமாக மாறியிருக்கிறது.