தமிழகத்துக்கான முதல் ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்: சென்னைக்கு இன்று நள்ளிரவு வருகிறது..!!

13 May 2021, 2:40 pm
oxygen train - updatenews360
Quick Share

சென்னை: மேற்கு வங்கத்தில் இருந்து தமிழகத்துக்கான முதல் ஆக்சிஜன் ரயில் இன்று சென்னையை வந்தடைகிறது.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துவருகிறது. குறிப்பாக, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவைப்படும் ஆக்சிஜன், ரெம்டெசிவிர் மருந்துகள், கொரோனா தடுப்பூசிகள், மருத்துவமனைகளில் படுக்கை வசதி ஆகியவற்றின் தட்டுப்பாடு காரணமாக கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் உயிரிழந்து வருகின்றனர்.

இது இந்தியா மட்டுமல்லாமல் உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில், அமெரிக்கா, கனடா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் ஆக்சிஜன் நிரப்பப்பட்ட டேங்கர்கள், வெண்டிலேட்டர்கள் உள்ளிட்டவையை விமானங்கள் மூலம் இந்தியாவிற்கு அனுப்பிவருகின்றன.

அதேபோல், இந்தியாவில் ஆக்சிஜன் பற்றாக்குறையைப் போக்கும் வகையில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. அந்த வகையில், மேற்கு வங்க மாநிலம் துர்காப்பூரில் இருந்து 80 மெட்ரிக் டன் ஆக்சிஜன் ரயில் தமிழகம் வந்துகொண்டிருக்கிறது. தமிழகத்துக்கான முதல் ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில் சென்னையில் உள்ள தண்டையார்பேட்டைக்கு இன்று நள்ளிரவு 01.00 மணிக்கு வருகிறது.

இதனிடையே, பிரிட்டனில் உள்ள பிரிட்டிஷ் ஆக்சிஜன் கம்பெனி என்ற நிறுவனத்தில் இருந்து மேலும் 1,200 ஆக்சிஜன் சிலிண்டர்கள் இந்தியாவுக்கு வந்து சேர்ந்தன.

Views: - 54

0

0