கொரோனாவுக்கு பயந்து கடலில் குதித்த 20 மீனவர்கள்…! என்னாச்சு தெரியுமா…?

5 April 2020, 12:05 pm
Fisher Mnas Arrest- updatenews360
Quick Share

ராமநாதபுரம்: கொரோனாவுக்கு பயந்து கடலில் குதித்து நீந்தி கரைக்கு வர முயன்ற ராமநாதபுரம் மீனவர் உயிரிழந்தார்.

ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் 20 பேர்  மங்களூரிலிருந்து கடல் வழியாக  வந்தனர். அப்போது முருகன் என்பவர் வலங்காபுரி கடல் பகுதியில் குதித்தார்.

கொரோனாவுக்கு பயந்து கடலில் குதித்து நீந்தி கரை செல்ல முயன்றார். அப்போது நீரில் மூழ்கி பலியானார். அவருடன் வந்த மற்ற 19 பேரும் உயிருடன் கரை திரும்பியுள்ளனர்.

பலியான முருகன் உடலை ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது. உடற்கூறு ஆய்வுக்கு பிறகு அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது.

கொரோனா நோய் தாக்கும் என்று உயிருக்கு பயந்து, கடலில் குதித்த மீனவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.