சென்னை – கொல்கத்தா இடையிலான விமான சேவை ரத்து : மறுஅறிவிப்பு வரும் வரை நோ சர்வீஸ்..!!

6 May 2021, 11:30 am
flight restriction - updatenews360
Quick Share

சென்னை : சென்னையில் இருந்து கொல்கத்தா செல்லும் அனைத்து விமானங்களின் சேவையும் இன்று முதல் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை இல்லாத உச்சமாக ஒரே நாளில் 4.12 லட்சம் பாதிப்புகள் பதிவாகியுள்ளன. அதேவேளையில், பலி எண்ணிக்கையும் 4 ஆயிரத்தை நெருங்கி விட்டது. தற்போது வரை 35,66,398 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில், மறு அறிவிப்பு வரும் வரையில் சென்னையில் இருந்து கொல்கத்தா செல்லும் அனைத்து விமானங்களின் சேவை இன்று முதல் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், விமான சேவை ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 152

0

0