திமுகவில் இருந்து நீக்கப்பட்ட கே.பி. ராமலிங்கம் இன்று பாஜகவில் இணைகிறார்

21 November 2020, 10:52 am
kp ramalingam - updatenews360
Quick Share

திமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்பி கேபி ராமலிங்கம் இன்று பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா காலகட்டத்தில் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என திமுக தலைவர் முக ஸ்டாலின் தமிழக அரசுக்கு வலியுறுத்தியிருந்தார். ஆனால், கொரோனா பேரிடரை மத்திய, மாநில அரசுகள் சிறப்பாக கையாண்டு வரும் நிலையில், அனைத்து கட்சி கூட்டம் அவசியமில்லை என்று திமுகவின் முன்னாள் எம்பி கே.பி. ராமலிங்கம் கருத்து தெரிவித்திருந்தார்.

இதன்மூலம், தலைமைக்கு எதிராக பேசியதாக கே.பி. ராமலிங்கத்தை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்.

இந்த நிலையில், இன்று காலை 11 மணியளவில் சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் தமிழக பாஜக பொறுப்பாளர் சி.டி.ரவி, இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி முன்னிலையில் அவர் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று தமிழகம் வர உள்ள நிலையில், அவரையும் கே.பி.ராமலிங்கம் சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது.

Views: - 23

0

0